ஐபிஎல்லில் அதிக மெய்டன் ஓவர்களை வீசி அசத்திய டாப் 10 பவுலர்கள் இவங்கதான்
ஐபிஎல் பொழுதுபோக்கிற்காகவும் வர்த்தக ரீதியாகவும் நடத்தப்படும் தொடர். ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்து மகிழ்விப்பதே ஐபிஎல்லின் நோக்கம். அதனால் பவுண்டரியும் சிக்ஸர்களுமாக பேட்ஸ்மேன்கள் விளாசினால்தான், அது பொழுதுபோக்காக அமையும் என்பதால், ஐபிஎல் பேட்டிங்கிற்கு சாதகமான தொடராகவே இருக்கிறது. அதனால் பவுலர்களுக்கு கடும் சவாலானதாக இருக்கிறது. ஆனாலும் ஐபிஎல்லில் சில பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு மேட்ச் வின்னர்களாக திகழ்கின்றனர். அந்தவகையில் பேட்டிங்கிற்கு சாதகமான ஐபிஎல்லில் மெய்டன் ஓவர்களை வீசுவதே கடினம். அதிலும் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய டாப் 10 பவுலர்களை பார்ப்போம்.
1. பிரவீன் குமார் - 14 மெய்டன் ஓவர்கள்
2. இர்ஃபான் பதான் - 10 மெய்டன்
3. தவால் குல்கர்னி - 8 மெய்டன் (90 போட்டிகள்)
4. லசித் மலிங்கா - 8 மெய்டன் (122 போட்டிகள்)
5. சந்தீப் ஷர்மா - 8 மெய்டன் (79 போட்டிகள்)
6. புவனேஷ்வர் குமார் - 8 மெய்டன் (117 போட்டிகள்)
7. டேல் ஸ்டெய்ன் - 7 மெய்டன் ஓவர்கள்
8. அமித் மிஷ்ரா - 6 மெய்டன் ஓவர்கள் (147 போட்டிகள்)
9. ஹர்பஜன் சிங் - 6 மெய்டன் (160 போட்டிகள்)
10. முனாஃப் படேல் - 5 மெய்டன்