செலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி

First Published 28, Oct 2020, 11:23 PM

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவின் அபாரமான பேட்டிங்கால் மும்பை இந்தியன்ஸ் அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்ததுடன், பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில், தலா 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்த மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதின. டாஸ் வென்ற பொல்லார்டு ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணிக்கு தொடக்க வீரர்கள் படிக்கல்லும் ஜோஷ் ஃபிலிப்பும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 8 ஓவரில் 71 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய ஃபிலிப் 24 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும்  ஒரு சிக்ஸருடன் 33 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி, படுமந்தமாக ஆடி 14 பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 9 ரன்களுக்கு பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் பும்ரா, போல்ட், பாட்டின்சன், ராகுல் சாஹர் ஆகிய அனைவரின் பவுலிங்கையும் போட்டு பொளந்துகட்டிய படிக்கல், அரைசதம் அடித்தார். கோலி சோபிக்காத நிலையில், ஆர்சிபி அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸூம் சோபிக்கவில்லை. டிவில்லியர்ஸ் 12 பந்தில் 15 ரன்கள் அடித்து பொல்லார்டு வீசிய பதினாறாவது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷிவம் துபே, ஆறு பந்தில் இரண்டே ரன் அடித்து ஆட்டமிழந்ததுடன், ரன்வேகத்தையும் குறைத்துவிட்டு சென்றார்.

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் அடித்து ஆடமுயன்று, படிக்கல்லும் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 45 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 74 ரன்களுக்கு படிக்கல் ஆட்டமிழக்க, டெத் ஓவர்களில் குர்கீரத் சிங் மன்னும் வாஷிங்டன் சுந்தரும் ஒருசில பவுண்டரிகளை அடித்தனர். இதையடுத்து 20 ஓவரில் 164 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி.

165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டிகாக் 18 ரன்களிலும், இஷான் கிஷன் 25 ரன்களிலும் ஆட்டமிழக்க, சவுரப் திவாரி வெறும் 5 ரன்களுக்கு நடையை கட்டினார். க்ருணல் பாண்டியா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், 3ம் வரிசையில் களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ், ஆர்சிபி அணியின் பவுலிங்கை பொளந்துகட்டினார். கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல் என அனைத்திலும் தொடர்ச்சியாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுவரும் சூர்யகுமார் யாதவுக்கு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் இடம் மறுக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ள நிலையில், இந்திய அணி செலக்டார்ஸின் செவிட்டில் அறையும்படி, இந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸை ஆடினார்.

ஆர்சிபி பவுலர்கள் ஸ்டெய்ன், சிராஜ், சாஹல், மோரிஸ் என அனைவரின் பவுலிங்கையும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி பொளந்துகட்டிய சூர்யகுமார் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்ததும் பெரும்பாலான வீரர்களை போல அசால்ட்டாக ஒரு ஷாட்டை ஆடி, அவுட்டாகாமல் கடைசிவரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

43 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்து, மும்பை அணிக்கு வெற்றி பெற்றுக்கொடுத்தார். இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டுவரும் நிலையில், இந்திய அணியின் கேப்டனான கோலி கேப்டனாக இருக்கும் ஆர்சிபி அணிக்கு எதிராக மிகச்சிறப்பாக ஆடி, தேர்வாளர்களின் செவிட்டில் அறைவது போல ஒரு இன்னிங்ஸை ஆடியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்து, பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது மும்பை இந்தியன்ஸ்.