KXIP vs SRH: பஞ்சாப் அணியில் அதிர்ச்சிகர மாற்றம்.. மெயின் தலையே டீம்ல இல்ல..!
கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் பவுலிங்கை தேர்வு செய்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடக்கிறது. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி இது என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளன.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர், பவுலிங்கை தேர்வு செய்தார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. யாருமே எதிர்பார்த்திராத விதமாக, இந்த சீசனில் மிக அருமையாக ஆடி, 398 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த 3வது வீரராக இருக்கும் மயன்க் அகர்வால் நீக்கப்பட்டு மந்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
மயன்க் அகர்வால், ராகுலுடன் இணைந்து கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலுமே நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளார். மயன்க் இந்த போட்டியில் ஆடாததால்
ராகுலுடன் மந்தீப் சிங் தொடக்க வீரராக இறங்கியுள்ளார்.
மற்றுமொரு மாற்றம், ஜிம்மி நீஷமிற்கு பதிலாக கிறிஸ் ஜோர்டான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:
கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங், நிகோலஸ் பூரான், க்ளென் மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், அர்ஷ்தீப் சிங், ஷமி, ரவி பிஷ்னோய், முருகன் அஷ்வின்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷாபாஸ் நதீமிற்கு பதிலாக கலீல் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
டேவிட் வார்னர்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், பிரியம் கர்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன், கலீல் அகமது.