ஐபிஎல் 2020: ”மாத்தியோசி”.. நான் ஆட்டுமந்தை கூட்டம் இல்லடானு அதிரடி காட்டிய வார்னர்
கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் கேகேஆரும் சன்ரைசர்ஸும் மோதுகின்றன.
இந்த 2 அணிகளுமே தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால், இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கியுள்ளன.
அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர், இந்த சீசனில் முதல்முறையாக பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் தொடங்கி, இதுவரை 7 போட்டிகள்(இந்த போட்டி நீங்கலாக) நடந்துள்ளன. அந்த அனைத்து போட்டிகளிலுமே, டாஸ் வென்ற அணி பவுலிங்கையே தேர்வு செய்தது. 2வது பேட்டிங் ஆடிய அணிகள் தான் அதிகமாக தோற்றன். ஆனாலும் கூட, டாஸ் வென்ற அணிகள், முதலில் பவுலிங்கையே தேர்வு செய்தன.
சன்ரைசர்ஸ் அணி பெரும்பாலும் அதன் டாப் ஆர்டர் வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவையே அதிகமாக சார்ந்துள்ளது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது.