இனிவரும் மேட்ச்களில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்துறோம்; தட்றோம் தூக்குறோம்! ரசிகர்களுக்கு வாட்சன் வாக்குறுதி

First Published 23, Oct 2020, 6:48 PM

தொடர் தோல்விகளை தழுவி கிட்டத்தட்ட நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டுவிட்ட சிஎஸ்கே அணி, இனிவரும் போட்டிகளில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ஷேன் வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் சிஎஸ்கே அணிக்கு கொடுங்கனவாக அமைந்துவிட்டது. ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி என்ற சாதனைக்கு சொந்தக்கார சிஎஸ்கே அணி, இந்த சீசனில் அந்த பெருமையை இழக்கிறது.

இந்த சீசனில் இதுவரை ஆடிய 10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி, எஞ்சிய 4 போட்டிகளிலும் வென்றாலும், பிளே ஆஃபிற்கு செல்லும் வாய்ப்பு, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே அமையும். இந்த சீசனில் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

அதுமட்டுமல்லாது எஞ்சிய 4 போட்டிகளில் சிஎஸ்கே எதிர்கொள்ளவுள்ள அணிகள், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, கேகேஆர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகும். எனவே சிஎஸ்கேவின் வெற்றி எளிதல்ல.

இந்நிலையில், இன்று சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இனிவரும் போட்டிகள் குறித்தும் சிஎஸ்கே அணி குறித்தும் பேசிய ஷேன் வாட்சன், இனிவரும் 4 போட்டிகளிலும் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். சிஎஸ்கே அணிக்கு நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் கொட்டி கொடுக்கும் ரசிகர்களுக்கு, சிறந்த ஆட்டத்தின் மூலம் அதை திருப்பியளிப்போம் என்று ஷேன் வாட்சன் உறுதியளித்துள்ளார்.