என்னோட இத்தனை வருஷ கிரிக்கெட் கெரியரில் நான் பார்த்த பெஸ்ட் ஃபீல்டிங் இதுதான்..! பூரானுக்கு சச்சின் புகழாரம்

First Published 28, Sep 2020, 1:53 PM

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் நிகோலஸ் பூரான் செய்த மிக மிக அபாரமான ஃபீல்டிங்கை சச்சின் டெண்டுல்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த போட்டி, நேற்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கும் இடையே நடந்த போட்டி. ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில், 224 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டி, ஐபிஎல்லில் அதிகபட்ச இலக்கை விரட்டி வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் படைத்தது.

இந்த போட்டியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தன. கேஎல் ராகுல் - மயன்க் அகர்வாலின் அபார தொடக்கம், சஞ்சு சாம்சனின் அதிரடி பேட்டிங், ஆரம்பத்தில் படுமோசமாக திணறி பின்னர் அடித்து நொறுக்கி ஆட்டத்தையே திருப்பிய ராகுல் டெவாட்டியாவின் பேட்டிங், நிகோலஸ் பூரானின் மிரட்டலான ஃபீல்டிங் என இந்த போட்டி, ஒரு முழுமையான ஐபிஎல் டி20 போட்டியாக அமைந்தது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கின் போது, முருகன் அஷ்வின் வீசிய 8வது ஓவரின் 3வது பந்தை சஞ்சு சாம்சன், மிட் விக்கெட் திசையில் தூக்கியடிக்க, கிட்டத்தட்ட சிக்ஸருக்கே சென்றுவிட்ட அந்த பந்தை பவுண்டரி லைனுக்குள் டைவ் அடித்து பிடித்து, கீழே விழுவதற்கு முந்தைய நொடி, பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே வீசினார்.

ஜாண்டி ரோட்ஸ், பாண்டிங், சைமண்ட்ஸ், ஜடேஜா, ரெய்னா, மார்டின் கப்டில் என எத்தனையோ மிகச்சிறந்த ஃபீல்டர்கள் அருமையான ஃபீல்டிங் செய்து பார்த்திருக்கிறோம். ஆனால் பூரான் நேற்று செய்த அந்த குறிப்பிட்ட ஃபீல்டிங், கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச்சிறந்தது என பல ஜாம்பவான்கள் பாராட்டிவருகின்றனர்.

அதற்கு காரணம், கிட்டத்தட்ட சிக்ஸர் சென்றுவிட்ட பந்தை பவுண்டரி லைனுக்குள் டைவ் அடித்து பிடித்தது மட்டுமல்லாது, பவுண்டரி லைனுக்குள் விழுந்தால் எதிரணிக்கு சிக்ஸர் கிடைத்துவிடும் என்பதால், கீழே விழுவதற்கு முன் செம டைமிங்கில் பந்தை வெளியே வீசினார் பூரான். சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டரும் பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளருமான ஜாண்டி ரோட்ஸே வியந்துபோய், எழுந்து நின்று கைதட்டினார்.

24 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி, ஆல்டைம் பெஸ்ட் வீரர்களில் ஒருவராக திகழும், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கரே, தனது கிரிக்கெட் கெரியரில் இப்படியொரு ஃபீல்டிங்கை பார்த்ததில்லை என்று பாராட்டியுள்ளார்.

கெவின் பீட்டர்சன், வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பலரும் நிகோலஸ் பூரானின் ஃபீல்டிங்கை வெகுவாக புகழ்ந்துள்ளனர். இவ்வளவுக்கும் அவர் தொழில் முறை விக்கெட் கீப்பர். ஒரு விக்கெட் கீப்பரான அவர் செய்த ஃபீல்டிங், மிகவும் அபாரமானது.

loader