ஐபிஎல் 2020: நீங்க “கிரேட்”டா தம்பிங்களா.. இளம் வீரர்களை வெகுவாக பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்

First Published 25, Oct 2020, 4:05 PM

இளம் வீரர்கள் மந்தீப் சிங் மற்றும் நிதிஷ் ராணா ஆகிய இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எஞ்சிய ஒரு இடத்திற்கு கேகேஆர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் போட்டி போடுகின்றன.

இந்த ஐபிஎல் சீசன் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்துள்ளது. தேவ்தத் படிக்கல்(ஆர்சிபி), ராகுல் டெவாட்டியா(ராஜஸ்தான்), ரியான் பராக்(ராஜஸ்தான்), ரவி பிஷ்னோய்(பஞ்சாப்), வாஷிங்டன் சுந்தர்(ஆர்சிபி), டி.நடராஜன்(சன்ரைசர்ஸ்), கார்த்திக் தியாகி(ராஜஸ்தான்), ஷுப்மன் கில்(கேகேஆர்), இஷான் கிஷன்(மும்பை இந்தியன்ஸ்) உள்ளிட்ட பல இளம் வீரர்கள் இந்த சீசனில் அபாரமாக ஆடிவருகின்றனர்.

இந்நிலையில், தங்களது அன்பிற்குரியவர்களை இழந்தபோதிலும், அந்த வலியையும் அழுகையையும் அடக்கிக்கொண்டு தங்களது அணிகளுக்காக ஆடிய மந்தீப் சிங் மற்றும் நிதிஷ் ராணா ஆகிய இருவரையும் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் மந்தீப் சிங்கின் தந்தை, ரொம்ப நாளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒருசில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். ஐபிஎல்லில் ஆடும் மந்தீப் சிங், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதால், கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி அவரால் உடனடியாக இந்தியா திரும்ப முடியாது. தனது தந்தையின் இழப்பின் துக்கத்தை அடக்கிக்கொண்டு பஞ்சாப் அணிக்காக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடினார் மந்தீப் சிங். அவர் தான் தொடக்க வீரராக இறங்கினார். பஞ்சாப் அணி வெற்றியை மந்தீப் சிங்கின் தந்தைக்கு அர்ப்பணித்தது.

அதேபோல கேகேஆர் அணி வீரர் நிதிஷ் ராணாவின் மாமனார், புற்றுநோயால் கடந்த வெள்ளிக்கிழமை(24ம் தேதி) உயிரிழந்தார். டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக அரைசதம் அடித்த ராணா, தனது அரைசதத்தை மாமனாருக்கு அர்ப்பணித்து இரங்கல் தெரிவிக்கும் விதமாக, காலமான தனது மாமனார் பெயரான சுரீந்தரின் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை காட்டினார்.

இளம் வீரர்கள் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தபோதிலும், வலியை தங்களுக்குள் வைத்துக்கொண்டு தங்கள் அணிக்காக ஆடிய ராணா, மந்தீப் சிங் ஆகிய இருவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

இதுகுறித்து சச்சின் பதிவிட்ட டுவீட்டில்,  அன்புக்குரியவர்களை இழப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. அதைவிட இதயத்தை நொறுக்கக்கூடிய விஷயம், இறுதிச்சடங்கிற்கு போக முடியாதது.. மந்தீப் சிங் மற்றும் நிதிஷ் ராணாவின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் இருவருக்கும் ஹேட்ஸ் ஆஃப்.. அருமையாக ஆடினீர்கள் என்று சச்சின் தெரிவித்துள்ளார்.