சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தல தோனி.. சதி செய்து காரியத்தை சாதித்த BCCI..பாவம் சொல்லிருந்த அவரே போயிருப்பாப்ல
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஓய்வு அறிவித்து வாரங்கள் ஆன பின்பும் கூட இன்னும் அவர் குறித்த செய்திகள் நின்றபாடில்லை..
தோனி குறித்து அவரது நெருங்கிய நண்பரும், முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்.பி.சிங் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : டி20 போட்டிகளில் தோனி ஒரு அசாத்தியமான வீரர்.
அதனால்தான் அவர் டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்காக காத்திருந்தார். ஆனால் அவரது கிரிக்கெட்டையும் மீறி அவரது உடல் தகுதி மற்றும் வயது ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும். கடந்த 15 மாதங்களாக அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்று கூறியிருந்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பையில் தோனி நான்காவதாக களமிறங்கி பேட்டிங் செய்வே விரும்பினார்.ஆனால் அணி நிர்வாகம் அவரை கடைசியிலே விளையாட வாய்ப்பு கொடுத்தது. அதுவும் அரையிறுதிப் போட்டியில் தான் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.
முன்புபோல் போட்டியை தோனியால் பினிஷிங் செய்ய முடியவில்லை. அதுவே அவர் கிரிக்கெட்டில் இருந்து விலக எச்சரித்து இருக்கும் என்று தான் கருதுவதாக ஆர் பி சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று தோனியை பினிஷராக நாம் பார்த்திருப்போம் ஆனால் அவர் 50 ஓவர் உலககோப்பை தொடரில் அவர் 4 ஆவது இடத்தில் விளையாடவே ஆசைப்பட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.