நான் இன்றைக்கு சிறந்த கேப்டனா இருக்கேன்னா அதுக்கு அவருதான் காரணம்..! மனம் திறந்த ரோஹித் சர்மா

First Published 27, Sep 2020, 5:43 PM

ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனான ரோஹித் சர்மா, தான் ரிக்கி பாண்டிங்கிடமிருந்து கற்றுக்கொண்ட கேப்டன்சி திறன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஐபிஎல்லின் நடப்பு சாம்பியனும் 4 முறை சாம்பியன் அணியுமான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசனும் நல்ல தொடக்கமாகவே அமைந்துள்ளது. சிஎஸ்கேவிற்கு எதிராக தோற்றாலும், கேகேஆரை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐபிஎல்லில் அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். 4 முறையும் மும்பை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா. ஐபிஎல்லில் அதிக முறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான ரோஹித் சர்மா, ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்.

ரோஹித் சர்மாவின் கேப்டன்சி திறனை பல முன்னாள் ஜாம்பவான்கள் தொடர்ந்து பாராட்டிவருகின்றனர். களவியூகம், இக்கட்டான சூழல்களை நிதானமாகவும் பொறுமையாகவும் கையாளும் விதம், வீரர்களை பயன்படுத்தும் மற்றும் கையாளும் விதம் ஆகியவற்றில் ரோஹித் சர்மா கைதேர்ந்தவர்.

இந்நிலையில், ரிக்கி பாண்டிங்கிடமிருந்து தான் வீரர்களை கையாளும் விதத்தை கற்றுக்கொண்டதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மா 2013ம் ஆண்டு ஐபிஎல்லின் கேப்டன்சி பொறுப்பை ஏற்றார். அந்த சீசனின் தொடக்கத்தில் கேப்டனாக இருந்தது ரிக்கி பாண்டிங் தான். ஆனால் அந்த சீசனின் இடையில், கேப்டன்சியிலிருந்து விலகிய பாண்டிங், ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸின் அணியின் கேப்டனாக்கி அந்த அணியில் ரோஹித்தின் தலைமையின் கீழ் ஆடினார். அந்த சீசனில் தான் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

அதன்பின்னர் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தபோது, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இருந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக கோலோச்சிய மிகச்சிறந்த கேப்டன் ரிக்கி பாண்டிங் என்பதால், அவருடன் இருந்த காலத்தில் அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ரோஹித்திற்கு கிடைத்திருக்கிறது. அதுவும், ரோஹித் சர்மா ஒரு சிறந்த கேப்டனாக திகழ காரணம்.

இந்நிலையில், ரிக்கி பாண்டிங் குறித்து பேசியுள்ள ரோஹித் சர்மா, என்னுடைய ஆட்டம் முக்கியமானதாக இருந்தாலும், ஒரு கேப்டனாக மற்ற அனைத்து வீரர்களிடமிருந்துமே ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பை பெறவேண்டும். என்னுடன்(கேப்டன்) சேர்த்து மொத்தம் 11 வீரர்கள் மட்டுமே களத்தில் இறங்கி விளையாடுவோம். மற்ற வீரர்கள் பென்ச்சில் தான் இருப்பார்கள். ஆனால் ஒவ்வொரு வீரரும் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களிடம் எடுத்துரைத்து, அவர்களையும் முக்கியமானவர்களாக நினைக்கவைக்க வேண்டும் என்பதை பாண்டிங்கிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன்.

அணி வீரர்களிடம், இதை செய் அதை செய் என்று ஒரு கேப்டனாக சொல்வதை விட, அவர்களின் கருத்தை கேட்டு, அதிலிருந்து சரியான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த திட்டங்களை செயல்படுத்த சொல்ல வேண்டும் என்று என்னிடம் சொன்னார் பாண்டிங். ஒரு கேப்டன் எதையும் வீரர்கள் மீது திணிக்காமல், அவர்களின் கருத்தை கேட்டு அதிலிருந்து சரியானதை எடுத்து செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற விஷயத்தை பாண்டிங்கிடமிருந்து கற்றுக்கொண்டேன் என்றார் ரோஹித் சர்மா.

loader