தம்பிங்களா நீங்க 2 பேரும் ஓரமா உட்காருங்க; பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றங்கள்.. கோலியின் அதிரடி முடிவு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோலி, பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆடும் அணிகள்.
துபாயில் நடக்கும் இந்த போட்டியில், ஆர்சிபியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் பஞ்சாப் அணியும், முதல் போட்டியில் வென்ற உற்சாத்துடனும் நம்பிக்கையுடனும் வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலும் ஆர்சிபியும் களமிறங்கியுள்ளன.
டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். கோலியின் இந்த முடிவில் ஆச்சரியமில்லை. ஏனெனில் 2வது இன்னிங்ஸில் பனி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பந்துவீசுவது கடினமாக இருக்கும். அதனால் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார் கோலி.
சன்ரைசர்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் தான் ஆர்சிபி இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆர்சிபி அணி:
ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், ஜோஷ் ஃபிலிப்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், டேல் ஸ்டெய்ன், யுஸ்வேந்திரர் சாஹல்.
பஞ்சாப் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சொதப்பிய கிறிஸ் ஜோர்டான் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷமும், ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முருகன் அஷ்வினும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி::
கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கருண் நாயர், நிகோலஸ் பூரான், சர்ஃபராஸ் கான், க்ளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், முருகன் அஷ்வின், ஷெல்டான் கோட்ரெல், ரவி பிஷ்னோய், முகமது ஷமி.