ஐபிஎல் 2020: ஆர்சிபி அணி அப்படியொரு அதிரடி முடிவை எடுத்தது ஏன்..? மைக் ஹெசன் விளக்கம்

First Published 22, Oct 2020, 4:34 PM

கேகேஆருக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி எடுத்த அதிரடி முடிவு குறித்து அந்த அணியின் கிரிக்கெட்டுக்கான இயக்குநர் மைக் ஹெசன் விளக்கமளித்துள்ளார்.

முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி அணி, ஐபிஎல் 13வது சீசனில் அசத்தலாக ஆடி வெற்றிகளை குவித்து, புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருப்பதுடன், பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்தே விட்டது.

ஆர்சிபி அணி இந்த சீசனில் வெற்றிகரமாக திகழ்வதற்கு முக்கிய காரணம், அந்த அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன். முந்தைய சீசன்களில் பேட்டிங்கில் கோலி மற்றும் டிவில்லியர்ஸையே அதிகமாக சார்ந்திருந்தது.

ஆனால் இந்த சீசனில் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், கிறிஸ் மோரிஸ் ஆகியோரும் சிறந்த பங்களிப்பு செய்வதால் கோலி மற்றும் டிவில்லியர்ஸை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

அதேபோல, இதற்கு முந்தைய சீசன்களில் பவுலிங் படுசொதப்பலாக இருந்த நிலையில், இந்த சீசனில் நவ்தீப் சைனி, இசுரு உடானா, கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், சாஹல் என தரமான ஆறு பவுலிங் ஆப்சனுடன் களமிறங்குவதால் பவுலிங் யூனிட்டும் சிறப்பாக அமைந்துள்ளது.

அந்தவகையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்துவரும் ஆர்சிபி அணி, கேகேஆருக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆரை 84 ரன்களுக்கு சுருட்டி, 85 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், கோலி அவரது ஆஸ்தான 3ம் வரிசையில் இறங்காமல், இளம் வீரர் குர்கீரத் சிங் மன் இறக்கப்பட்டார். அதன்பின்னர் 2வது விக்கெட்டும் உடனடியாக விழுந்ததால் 4ம் வரிசையில் களத்திற்கு வந்த கோலியும் குர்கீரத்தும் இணைந்து போட்டியை முடித்துவைத்தனர்.

இந்நிலையில், கோலி 3ம் வரிசையில் இறங்காமல் குர்கீரத் சிங் மன்னை அந்த வரிசையில் இறக்கியது குறித்து ஆர்சிபி அணியின் கிரிக்கெட்டுக்கான இயக்குநர் மைக் ஹெசன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மைக் ஹெசன், குர்கீரத் சிங் மன்னுக்கு முந்தைய போட்டிகளில் பேட்டிங் ஆட சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அவருக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக, அவர் ஒரு இன்னிங்ஸை ஆட வேண்டியிருந்தது. அதற்காகத்தான் 3ம் வரிசையில் இறக்கிவிடப்பட்டார். மேலும், ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி மிடில் ஓவர்களில் பந்துவீசுவார். ஸ்பின் பவுலிங்கை திறம்பட ஆடக்கூடிய குர்கீரத் சிங் மன், வருண் சக்கரவர்த்தியை சிறப்பாக ஆடுவார் என்பதும் மற்றொரு காரணம் என்று மைக் ஹெசன் தெரிவித்தார்.