ஃபார்முக்கு திரும்பி தெறிக்கவிட்ட கிங் கோலி; தேவ்தத் படிக்கல் அதிரடி அரைசதம்.. ஆர்சிபி அபார வெற்றி

First Published 3, Oct 2020, 7:36 PM

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் 13வது சீசனில் இன்று 2 போட்டிகள் நடக்கும் நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஆர்சிபியும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஸ்மித் ஐந்து ரன்னிலும் சஞ்சு சாம்சன் 4 ரன்னிலும் பட்லர் 22 ரன்னிலும் என முக்கியமான வீரர்கள் மூவருமே 31 ரன்களுக்கே ஆட்டமிழந்துவிட்டனர். ராபின் உத்தப்பா இந்த போட்டியிலும் சொதப்பலாக பேட்டிங் ஆடி 17 ரன்னில் சாஹலின் சுழலில் வீழ்ந்தார்.

அதன்பின்னர் மஹிபால் லோம்ரார் பொறுப்புடன் பேட்டிங் ஆடி ராஜஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். லோம்ரார் 39 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டெவாட்டியா, ரியான் பராக், ஆர்ச்சர் ஆகியோரும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்ய ராஜஸ்தான் அணி தட்டுத்தடுமாறி 20 ஓவரில் 154 ரன்கள் அடித்தது.

155 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் ஃபின்ச் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் நன்றாக ஆடிக்கொண்டிருந்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல்லுடன் ஜோடி சேர்ந்தார் கோலி. கோலி கடந்த 3 போட்டிகளிலும் சரியாக ஆடாமல் இருந்தார். கோலி ஃபார்மில் இல்லாதது ஆர்சிபி அணிக்கு சற்று பின்னடைவாக இருந்தது. ஆனால் தேவ்தத் படிக்கல்லும் டிவில்லியர்ஸூம் நன்றாக ஆடிக்கொண்டிருந்ததால், கோலியின் மோசமான ஃபார்ம் ஆர்சிபியை பாதிக்காமல் இருந்தது.

ஆனால் இந்த போட்டியில் ஃபார்முக்கு திரும்பி, தனக்கே உரிய ஸ்டைலில் அருமையாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்தார் கோலி.

இளம் வீரர் தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடி அரைசதம் அடிக்க, மறுமுனையில் நிதானமாக ஆடி களத்தில் நிலைத்த கோலி, செட்டில் ஆனபின்னர், கவர் டிரைவ், புல் ஷாட் என தெறிக்கவிட்டார். தேவ்தத் படிக்கல் 45 பந்தில் 63 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கோலி 53 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் கடைசி வரை களத்தில் நின்று ஆர்சிபிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி, 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கோலி ஃபார்முக்கு திரும்பியிருப்பது ஆர்சிபி அணிக்கு கூடுதல் பலம்.

loader