ஜெயிச்சே தீரணும்.. உன்னைய டீம்ல வச்சுகிட்டு அது முடியாது கிளம்புப்பா.. RRல் அதிரடி மாற்றம்..! KXIP பேட்டிங்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டி மிக முக்கியமானது. பஞ்சாப் அணி 12 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று 4ம் இடத்தில் தற்போது உள்ளது. ராஜஸ்தான் அணி 12 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு உள்ள நிலையில், முக்கியமான போட்டியில் இன்று இரு அணிகளும் மோதுகின்றன.
பஞ்சாப் அணி தொடர் வெற்றிகளால் நல்ல நம்பிக்கையுடன் உள்ள நிலையில், சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய தன்னம்பிக்கையிலும், பென் ஸ்டோக்ஸ் அபார சதத்துடன் செம கம்பேக் கொடுத்துள்ளதாலும் ராஜஸ்தான் அணியும் மிகுந்த நம்பிக்கையுடன் களம் காண்கிறது. எனவே போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் களமிறங்குகிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:
கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மந்தீப் சிங், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான், மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், முருகன் அஷ்வின், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.
ராஜ்பூத்துக்கு பதிலாக வருண் ஆரோன் சேர்க்கப்பட்டுள்ளார்.
உனாத்கத் சரியில்லை என்று எடுக்கப்பட்ட அங்கித் ராஜ்பூத், அவருக்கு மேல் மோசமாக இருக்கிறார். ஆர்சிபிக்கு எதிராக ஜெயிக்க வேண்டிய போட்டியை ஒரே ஓவரில் தாரைவார்த்தார் உனாத்கத். அவருக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட ராஜ்பூத், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவிற்கு 27 ரன்களை வாரி வழங்கினார். மேலும் ராஜ்பூத் ஏற்கனவே பஞ்சாப் அணியில் இருந்ததால், அவரது பவுலிங்கை பஞ்சாப் வீரர்கள் நிறைய ஆடியிருப்பார்கள். எனவே இன்று வருண் ஆரோன் இறக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், கார்த்திக் தியாகி.