RR vs KKR: போட்டிக்கு முன்பே சிக்ஸர் அடித்த சஞ்சு சாம்சன்.. கொலைநடுங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கேகேஆரும் மோதுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் தோற்ற கேகேஆர் அணி, சன்ரைசர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்கள் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.
ராஜஸ்தான் அணி வெற்றி பெற்ற முதல் 2 போட்டிகளுமே ஷார்ஜாவில் நடந்தன. ஷார்ஜா மைதானம் மிகச்சிறியது என்பதால், அங்கு 2 போட்டிகளிலுமே ராஜஸ்தான் ராயல்ஸ் பெரிய ஸ்கோரை அடித்தது. சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரும் செம ஃபார்மில் மிரட்டினர். இந்நிலையில், இன்றைய போட்டி துபாயில் நடக்கவுள்ளது. துபாய் மைதானம் பெரியது என்பதால், இந்த சீசனில் முதல்முறையாக அங்கு ஆடப்போகும் ராஜஸ்தான் அணிக்கு சவாலாக இருக்கும்.
ஆனால் அதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உணர்ந்தே இருக்கிறது என்பதையும் அந்த சவாலை எதிர்கொள்ள, அதற்கேற்ப ராஜஸ்தான் அணி திட்டங்களை வகுத்திருக்கிறது என்பது சஞ்சு சாம்சனின் பேச்சு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.
இதுகுறித்து பேசிய சஞ்சு சாம்சன், வெவ்வேறு அணிகளுக்கு எதிராக, வெவ்வேறு மைதானங்களில் ஆடும்போது, திட்டங்களையும் அதற்கேற்ப மாற்ற வேண்டும். நாங்கள் கேகேஆரை துபாயில் எதிர்கொள்ளவுள்ளோம். துபாய் மைதானம் பெரியது. எனவே அதற்கேற்ப திட்டங்கள் மாற்றப்படும். எங்கள் அணி நிர்வாகத்தில் ஸ்மார்ட்டானவர்களை பெற்றிருக்கிறோம். கேகேஆருக்கு எதிரான போட்டிக்கு நாங்கள் ரெடி என்று சாம்சன் தெரிவித்துள்ளார்.
கேகேஆருக்கு எதிரான இன்றைய போட்டியில், கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கும். அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச ஆடும் லெவன்:
ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, டாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூத், ஜெய்தேவ் உனாத்கத்.