ராகுல் டெவாட்டியாவின் மற்றுமொரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்.. சன்ரைசர்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் செம கம்பேக்

First Published 11, Oct 2020, 8:14 PM

ராகுல் டெவாட்டியாவின் பொறுப்பான மற்றும் அபாரமான பேட்டிங்கால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 13வது சீசனில் முதல் 2 வெற்றிகளுக்கு பிறகு தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஒரு கம்பேக் வெற்றி முனைப்புடன் இன்று சன்ரைசர்ஸை எதிர்கொண்டது. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோ, 16 ரன்களில் கார்த்திக் தியாகியின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் வார்னருடன் ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டே அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடினார். வார்னரும் மனீஷ் பாண்டேவும் இணைந்து அருமையாக பேட்டிங் ஆடி, 2வது விக்கெட்டுக்கு 73 ரன்களை சேர்த்தனர்.

வார்னர் 48 ரன்களில் பதினைந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். களத்தில் நன்றாக செட்டில் ஆகி அரைசதம் அடித்த மனீஷ் பாண்டே 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டெத் ஓவர்களில் புதிதாக களத்திற்கு வந்த வில்லியம்சனும் ப்ரியம் கர்க்கும் இணைந்து ஒரு சில பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாச, 20 ஓவரில் 158 ரன்கள் அடித்தது சன்ரைசர்ஸ் அணி.

159 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பட்லருடன் பென் ஸ்டோக்ஸும் இறங்கினர். பென் ஸ்டோக்ஸை ஐந்து ரன்களில் 2வது ஓவரிலேயே கலீல் அகமது வீழ்த்த, கேப்டன் ஸ்மித்தும் ஐந்து ரன்களில் ரன் அவுட்டாக, பட்லர் 16 ரன்களிலும், உத்தப்பா 18 ரன்களிலும் சாம்சன் 26 ரன்களிலும் ஆட்டமிழக்க, 12 ஓவரில் 78 ரன்களுக்கே ஐந்து முக்கியமான விக்கெட்டுகளை இழந்துவிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகிய இருவரையுமே கலீல் அகமது தான் வீழ்த்தினார்.

அதன்பின்னர் ராகுல் டெவாட்டியாவும் இளம் வீரர் ரியான் பராக்கும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடி, அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி அழைத்து சென்று, டெத் ஓவர்களில் அடித்து ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். மிடில் ஓவர்களில் நிதானத்தை கையாண்ட ராகுல் டெவாட்டியா, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் அடித்து ஆடி தோல்வியை நெருங்கிய ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார்.

அதேபோலவே இந்த போட்டியிலும் டெத் ஓவரில் அடித்து நொறுக்கினார். ரஷீத் கான் வீசிய 18வது ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தார். நடராஜன் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார் டெவாட்டியா. அதனால் அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட, ரியான் பராக் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் விளாசினார்.

இதையடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. ராகுல் டெவாட்டியா 28 பந்தில் 45 ரன்களும், ரியான் பராக் 26 பந்தில் 42 ரன்கள் அடித்தார்.

loader