CSK vs MI: சிஎஸ்கேவிற்கு இதைவிட நல்ல சான்ஸ் கிடைக்காது.. ரோஹித் சர்மா ஆடல.. சிஎஸ்கேவில் தரமான 3 மாற்றங்கள்
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 13வது சீசனில் சிஎஸ்கே அணி ஆடிய 10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதுடன், கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்துவிட்ட சிஎஸ்கே, எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலுமே, மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.
அப்படியான நிலையில், கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் 11வது போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடல்நலக்குறைவால் இந்த போட்டியில் ஆடவில்லை. எனவே அவருக்கு பதிலாக சவுரப் திவாரி அணியில் எடுக்கப்பட்டுள்ளார். பொல்லார்டு கேப்டன்சி செய்கிறார். ரோஹித் சர்மா இல்லாத காரணத்தால், அதை பயன்படுத்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
டி காக்(விக்கெட் கீப்பர்), சவுரப் திவாரி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு(கேப்டன்), ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், நேதன் குல்ட்டர்நைல், பும்ரா.
சிஎஸ்கே அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாட்சன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக வெளிநாட்டு வீரராக லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட்டுள்ளார். இம்ரான் தாஹிர் அணிக்குள் வருவதால் பியூஷ் சாவ்லா நீக்கப்பட்டார். வாட்சனுக்கு பதில் தாஹிர்; பியூஷ் சாவ்லா நீக்கப்பட்டதால் இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டுள்ளார். கேதர் ஜாதவுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஜெகதீஷன் ஆடுகிறார்.
சிஎஸ்கே அணி:
சாம் கரன், ஃபாஃப் டுப்ளெசிஸ், ருதுராத் கெய்க்வாட், அம்பாதி ராயுடு, ஜெகதீசன், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர், ஜோஷ் ஹேசில்வுட்.