தோனி 2022 ஐபிஎல் வரை ஆடுவார்.. இதுதான் காரணம்

First Published 2, Nov 2020, 5:39 PM

தோனி 2022 ஐபிஎல் வரை ஆடுவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்கள் மற்றும் வீரர்களில் முதன்மையானவர் தோனி. சிஎஸ்கே அணியில் 2008லிருந்து (2016-2017 சீசன் தவிர) ஆடிவரும் தோனி, இந்த சீசனில் தான் சிஎஸ்கேவை முதல் முறையாக பிளே ஆஃபிற்கு அழைத்துச்செல்லவில்லை.

இதற்கு முன் ஆடிய 10 சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு சென்ற சிஎஸ்கே அணி, 8 முறை ஃபைனலுக்கு முன்னேறி, அதில் 3 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. அதற்கு முக்கிய காரணம் தோனி.

தோனி ஐபிஎல்லில் 204 போட்டிகளில் ஆடி 4632 ரன்களை குவித்துள்ளார். இந்த சீசன் தான் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கேவின் மோசமான சீசனாக அமைந்துள்ளது. தோனி அடுத்த சீசனில் ஆடுவாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில், பஞ்சாப்புக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், இதுகுறித்த டேனி மோரிசனின் கேள்விக்கு, கண்டிப்பாக அடுத்த சீசனில் ஆடுவேன் என்று தெரிவித்தார் தோனி.

தோனி சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து ஆடுவேன் என்று உறுதியளித்ததையடுத்து ரசிகர்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர். மேலும், அந்த போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்து அடுத்த பத்தாண்டுகளுக்கு வலுவான சிஎஸ்கே அணியை கட்டமைக்கவுள்ளதாக தெரிவித்தார். அது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியது.

இந்நிலையில், தோனி அடுத்த சீசனில் மட்டுமல்லாது 2022 வரை ஆடவேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மைக்கேல் வான், அடுத்த ஐபிஎல் சீசனும் ஒருவேளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தால், அதற்கடுத்த(2022) சீசனில் தோனி கண்டுப்பாக ஆட வேண்டும். ஏனெனில் தோனி மாதிரியான வீரர் ரசிகர்கள் இல்லாமல் விடைபெறக்கூடாது. ரசிகர்கள் மத்தியில் தான் விடைபெற வேண்டும்.  அதனால் அடுத்த சீசனில் அது முடியாவிட்டால், அதற்கடுத்த சீசனில் ஒரேயொரு போட்டியாவது ஆடிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.