மயன்க் அகர்வால் அதிரடி சதம்; ராகுல் அரைசதம்..! ராஜஸ்தான் சேஸ் பண்ணா இதுதான் ரெக்கார்டு.. அப்பேர்ப்பட்ட இலக்கு

First Published 27, Sep 2020, 9:36 PM

மயன்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுலின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 223 ரன்களை குவித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 224 ரன்கள் என்ற கடின இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. ஷார்ஜாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பஞ்சாப்பை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவருமே நல்ல ஃபார்மில் இருந்ததால், அருமையாக தொடங்கினர். பக்கா பிளானுடன் வந்த ராகுலும் மயன்க் அகர்வாலும் அதை சிறப்பாக செயல்படுத்தினர். மயன்க் அகர்வால் தொடக்கம் முதலே அடித்து ஆட, மறுமுனையில் ராகுல் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, கொஞ்சம் நிதானமாக ஆடினார்.

அதிரடியாக ஆடிய மயன்க் அகர்வால், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். ஜோஃப்ரா ஆர்ச்சர், ராஜ்பூத்,  டாம் கரன் ஆகீயோரின் ஃபாஸ்ட் பவுலிங்கையும் ஷ்ரேயாஸ் கோபால், டெவாட்டியா ஆகியோரின் ஸ்பின்னையும் என பாரபட்சமே பார்க்காமல் அடித்து ஆடி வெறும் 45  பந்தில் சதமடித்தார்.

மறுமுனையில் ராகுலும் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கே இருவரும் இணைந்து 16.3 ஓவரில் 183 ரன்களை குவித்தனர். சதமடித்து தனது கடமையை செவ்வனே செய்த மயன்க் அகர்வால், 50 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 106 ரன்களை குவித்து டாம் கரனின் பந்தில் ஆட்டமிழந்தார். மயன்க் அகர்வால் அடித்த இந்த சதம் தான், ஐபிஎல்லில் இந்திய வீரர் அடித்த இரண்டாவது அதிவேக அரைசதம் ஆகும்.

மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிட்ட மயன்க் அகர்வால் அவுட்டானதும், அடுத்த ஓவரில் ராகுல் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர்கள் இருவரும் பஞ்சாப் அணிக்கு தங்களது பணியை கொஞ்சம் அதிகமாகவே செய்து கொடுத்துவிட்டு சென்றனர்.

டெத் ஓவர்களில் பூரான் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாச, பஞ்சாப் அணி 20 ஓவரில் 223 ரன்களை குவித்து 224 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல்லில் வெற்றிகரமாக விரட்டப்பட்ட அதிகபட்ச இலக்கு 216 ரன்கள் தான். அதுவும் ராஜஸ்தான் அணி விரட்டியதுதான். 2008ல் டெக்கான் சார்ஜர்ஸ் நிர்ணயித்த 216 ரன்கள் என்ற இலக்கை யூசுஃப் பதானின் கடைசி நேர அதிரடியால் ராஜஸ்தான் அணி விரட்டி வெற்றி பெற்றது. இந்த இலக்கை விரட்டினால், இதுதான் ஐபிஎல்லில் விரட்டப்பட்ட அதிகபட்ச இலக்காக இருக்கும். ஷார்ஜா சிறிய மைதானம் என்பதாலும், ராஜஸ்தான் அணியிலும் பட்லர், ஸ்மித், சஞ்சு சாம்சன் ஆகிய அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள் என்பதாலும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

loader