RR vs KXIP: அதுக்கான அவசியமே இல்லேங்குறப்ப நாங்க ஏன் அதை செய்யணும்..? தெறிக்கவிடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆடிய முதல் போட்டியில் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்று, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இறங்குகிறது.
பஞ்சாப் அணி டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக தோற்றிருந்தாலும், சிஎஸ்கேவை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவருமே செம ஃபார்மில் உள்ளனர். இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சமபலத்துடன் உள்ளதால் உள்ளதால் போட்டி கண்டிப்பாக கடுமையாக இருக்கும்.
இரு அணிகளிலுமே பவர் ஹிட்டர்கள்(ராகுல், சஞ்சு சாம்சன், பட்லர், மயன்க் அகர்வால், பூரான், ஸ்மித், மேக்ஸ்வெல்) நிறைய பேர் இருப்பதாலும், ஷார்ஜா மைதானம் சிறியது என்பதாலும் கண்டிப்பாக சிக்ஸர் மழை பொழியப்படுவதுடன், பெரிய ஸ்கோர் மேட்ச்சாகத்தான் இருக்கும்.
சிஎஸ்கேவிற்கு எதிரான கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் பஞ்சாப் அணி இந்த போட்டியில் களமிறங்கும். அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான அவசியமில்லை என்பதால், எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன்:
கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், நிகோலஸ் பூரான், கருண் நாயர், சர்ஃபராஸ் கான், க்ளென் மேக்ஸ்வெல், ஜிம்மி நீஷம், முருகன் அஷ்வின், ஷெல்டான் கோட்ரெல், ரவி பிஷ்னோய், முகமது ஷமி.