4ம் இடத்தை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி.. சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கும் KXIP.. அதிரடி மாற்றத்துடன் RR

First Published 30, Oct 2020, 5:49 PM

புள்ளி பட்டியலில் 4ம் இடத்தை தீர்மானிக்கும் முக்கியமான இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் நிலையில், இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தான் முதல் அணியாக பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளது.

எஞ்சிய 3 இடங்களுக்கு கடும் போட்டி நிலவினாலும், ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால், கடைசி இடமான 4ம் இடத்திற்குத்தான் போட்டி கடுமையாக உள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர், சன்ரைசர்ஸ் ஆகிய 4 அணிகளுக்குமே அந்த வாய்ப்பு உள்ளது. ஆனால் பஞ்சாப் அணி தான் சீசனின் இரண்டாம் பாதியில் அபாரமாக ஆடி தொடர் வெற்றிகளை பெற்று வலுவான நிலையிலும், தன்னம்பிக்கையுடனும் உள்ளது.

பஞ்சாப் அணி 12 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று 4ம் இடத்தில் தற்போது உள்ளது. ராஜஸ்தான் அணி 12 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு உள்ள நிலையில், முக்கியமான போட்டியில் இன்று இரு அணிகளும் மோதுகின்றன.

பஞ்சாப் அணி தொடர் வெற்றிகளால் நல்ல நம்பிக்கையுடன் உள்ள நிலையில், சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய தன்னம்பிக்கையிலும், பென் ஸ்டோக்ஸ் அபார சதத்துடன் செம கம்பேக் கொடுத்துள்ளதாலும் ராஜஸ்தான் அணியும் மிகுந்த நம்பிக்கையுடன் களம் காண்கிறது. எனவே போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

பஞ்சாப் அணியில் இன்றைய போட்டியில் ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. காயத்தால் கடந்த சில போட்டிகளில் ஆடாத மயன்க் அகர்வாலின் உடற்தகுதி குறித்த அப்டேட் கொடுக்கப்படவில்லை. மயன்க் அகர்வால் குறித்த தகவல் எதிரணிகளுக்கு தெரியக்கூடாது என்பதற்காகக்கூட வெளியே சொல்லாமல் இருக்கக்கூடும். அவருக்கு பதிலாக ராகுலுடன் தொடக்க வீரராக இறங்கும் மந்தீப் சிங்கும் அருமையாக ஆடினார்.

ஆனால் இன்றைய போட்டியில் சர்ப்ரைஸாக மயன்க் அகர்வால் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மயன்க் அகர்வால் இறக்கப்படும் பட்சத்தில் தீபக் ஹூடா அணியிலிருந்து வெளியேற்றப்படுவார். அதைத்தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

உத்தேச கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், மந்தீப் சிங், கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரான், மேக்ஸ்வெல், கிறிஸ் ஜோர்டான், முருகன் அஷ்வின், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம். உனாத்கத் சரியில்லை என்று எடுக்கப்பட்ட அங்கித் ராஜ்பூத், அவருக்கு மேல் மோசமாக இருக்கிறார். ஆர்சிபிக்கு எதிராக ஜெயிக்க வேண்டிய போட்டியை ஒரே ஓவரில் தாரைவார்த்தார் உனாத்கத். அவருக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட ராஜ்பூத், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவிற்கு 27 ரன்களை வாரி வழங்கினார்.

எனவே இன்றைய போட்டியில் ராஜ்பூத்துக்கு பதிலாக உனாத்கத் எடுக்கப்படலாம். ஏனெனில் ராஜ்பூத் ஏற்கனவே பஞ்சாப் அணியில் இருந்ததால், அவரது பவுலிங்கை பஞ்சாப் வீரர்கள் நிறைய ஆடியிருப்பார்கள். எனவே இன்று உனாத்கத் இறக்கப்படலாம்.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், உனாத்கத், கார்த்திக் தியாகி.