நீ ஒழுங்கா ஆடுறதும் இல்ல;ஃபிட்டும் இல்ல.. மேட்ச் வின்னரையே தூக்கிப்போடும் கேகேஆர்! க்ரீன் சிக்னல் கிடைத்த குஷி

First Published 21, Oct 2020, 2:51 PM

ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4ம் இடங்களில் இருக்கும் அணிகளான ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன.

ஆர்சிபி அணி இதுவரை ஆடிய 9 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்று 3ம் இடத்தில் உள்ள நிலையில், கேகேஆர் அணி 9 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று 4ம் இடத்தில் உள்ளது.

பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய இன்னும் ஒருசில வெற்றிகளை மட்டுமே இந்த 2 அணிகளும் எதிர்நோக்கியிருந்தாலும் கூட, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடர் வெற்றிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்து வருவதால், ஆர்சிபி மற்றும் கேகேஆர் ஆகிய இரு அணிகளுக்குமே இன்றைய போட்டி மிக முக்கியமானது.

இந்த போட்டிக்கான கேகேஆர் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. கேகேஆர் அணியின் மேட்ச் வின்னராக கடந்த சீசன்களில் திகழ்ந்த அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல், இந்த சீசன் முழுவதுமே இதுவரை சரியாக பேட்டிங் ஆடாததுடன், தொடர் காயங்களும் அவருக்கு பெரிய பிரச்னையாக இருந்துவருகிறது.

கடந்த சீசனில் ரசல் சிக்ஸர் மழை பொழிந்து, தனி ஒருவனாக வெற்றிகளை பெற்று கொடுத்ததால், அவர் மீது இந்த சீசனில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 8ல் பேட்டிங் ஆடி வெறும் 92 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் காலில் காயமடைந்து, அதிலிருந்து மீண்டு வந்த ரசல், சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியிலும் காயமடைந்தார். ஆனாலும் கஷ்டப்பட்டு, கடைசி ஓவரை வீசி போட்டியை டை ஆக்கி கொடுத்தார். அவர் ஃபிட்டாக இருந்திருந்தால், அந்த போட்டியை சூப்பர் ஓவருக்கே செல்லாமல் ரன்களை கட்டுப்படுத்தியிருப்பார்.

எனவே ரசல் பேட்டிங்கிலும் ஃபார்மில் இல்லாத நிலையில், காயத்தாலும் அவதிப்பட்டுவருவதால், இன்றைய ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக சுனில் நரைன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

சுனில் நரைன் பவுலிங் ஆக்‌ஷன் குறித்த சர்ச்சை எழுந்ததால் தான் கடந்த சில போட்டிகளில் ஆடவில்லை. ஆனால் அவரது பவுலிங் ஆக்‌ஷனை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, அவரது பவுலிங் ஆக்‌ஷனில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் பந்துவீசலாம் என்றும் ஐபிஎல் நிர்வாகம் அனுமதியளித்துவிட்டதால், இன்றைய போட்டியில் ஆண்ட்ரே ரசலுக்கு பதிலாக சுனில் நரைன் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியின் மேட்ச் வின்னர் லாக்கி ஃபெர்குசன், தனது துல்லியமான மற்றும் மிரட்டலான பவுலிங்கால் கேகேஆர் அணியில் தனது இடத்தை உறுதி செய்துவிட்டதால் அவர் கண்டிப்பாக ஆடுவார்.

கேகேஆர் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயன் மோர்க(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி, லாக்கி ஃபெர்குசன்.