கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு; மறுபேச்சே இல்லங்க..! சச்சினிடம் சரணடைந்த ஜாண்டி ரோட்ஸ்

First Published 1, Oct 2020, 2:22 PM

கிரிக்கெட் கடவுளே கூறிவிட்டார் என்றால், அதற்கு மறுபேச்சே இல்லை என்று ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்தார்.

கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டர் தென்னாப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ். தென்னாப்பிரிக்க அணியில் 1992 முதல் 2003ம் ஆண்டுவரை ஆடினார்.

பாயிண்ட் திசையில் நின்று அவர் பிடித்த அபாரமான கேட்ச்களும் செய்த மிரட்டலான ரன் அவுட்டுகளும் காலத்தால் அழியாதவை. ஃபீல்டிங் என்றால் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் ஜாண்டி ரோட்ஸ் தான். ஃபீல்டிங்கின் அடையாளமாகவே ஜாண்டி ரோட்ஸ் திகழ்கிறார்.

இந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜாண்டி ரோட்ஸ் செயல்படுகிறார். ரோட்ஸ் அந்த அணியில் இருப்பதன் பிரதிபலன், களத்தில் நன்றாக தெரிகிறது. பஞ்சாப் வீரர்களின் ஃபீல்டிங் தரம் உயர்ந்திருக்கிறது. இதுவரை ஆடிய போட்டிகளில் அருமையாக ஃபீல்டிங் செய்துள்ளனர்.

அதிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிகோலஸ் பூரான் செய்த ஃபீல்டிங், கிரிக்கெட் வரலாற்றில் பெஸ்ட் ஃபீல்டிங் ஆகும். இதை மிகப்பெரிய ஜாம்பவான்களே ஒப்புக்கொண்டனர்.

சஞ்சு சாம்சன் மிட்விக்கெட் திசையில் தூக்கியடிக்க, கிட்டத்தட்ட சிக்ஸருக்கே சென்றுவிட்ட அந்த பந்தை பவுண்டரி லைனுக்குள் டைவ் அடித்து பிடித்து, கீழே விழுவதற்கு முந்தைய நொடி, பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே வீசினார். இவ்வளவுக்கும் அவர் ஒரு விக்கெட் கீப்பர்.

ஜாண்டி ரோட்ஸ், பாண்டிங், சைமண்ட்ஸ், ஜடேஜா, ரெய்னா, மார்டின் கப்டில் என எத்தனையோ மிகச்சிறந்த ஃபீல்டர்கள் அருமையான ஃபீல்டிங் செய்து பார்த்திருக்கிறோம். ஆனால் பூரான் செய்த அந்த குறிப்பிட்ட ஃபீல்டிங், கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச்சிறந்தது என பல ஜாம்பவான்கள் பாராட்டிவருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கையிலேயே தான் பார்த்ததில் இதுதான் சிறந்தது என பூரானை பாராட்டினார்.

ஜாண்டி ரோட்ஸே எழுந்து நின்று கைதட்டி தனது பாராட்டை வெளிப்படுத்தியிருந்தார். தனது ஃபீல்டிங் தரம் மேம்பட்டதற்கு ஜாண்டி ரோட்ஸ் தான் காரணம் என நிகோலஸ் பூரான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதுதான் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த ஃபீல்டிங் என்பதை, எத்தனையோ அருமையான ஃபீல்டிங்கை செய்த ஜாண்டி ரோட்ஸும் ஒப்புக்கொண்டுள்ளார். கிரிக்கெட் கடவுளே(சச்சின் டெண்டுல்கர்) இதுதான் பெஸ்ட் ஃபீல்டிங் என்று சொன்னபிறகு, மறுபேச்சே கிடையாது. அதுதான் பெஸ்ட் என்று ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

loader