ஐபிஎல் 2020: உன்னால் என் மொத்த பணமும் போச்சு.. ரசிகரின் குற்றச்சாட்டுக்கு ஜிம்மி நீஷமின் பதில்
ட்ரீம் 11ல் தன்னை துணை கேப்டனாக தேர்வு செய்ததால், மொத்த பணத்தையும் இழந்ததாக கூறிய ரசிகர் ஒருவருக்கு, நியூசிலாந்தை சேர்ந்த, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டரான ஜிம்மி நீஷம் ரியாக்ட் செய்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஷார்ஜாவில் இன்று நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சிஎஸ்கேவிற்கு எதிராக ஆடிய கடந்த போட்டியில் ராகுலின் அதிரடி சதத்தால்(132 ரன்கள் நாட் அவுட்) 206 ரன்களை குவித்து, சிஎஸ்கே அணியை வெறும் 109 ரன்களுக்கு சுருட்டி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அந்த போட்டியில் ட்ரீம் 11ல் ஆடிய ரசிகர் ஒருவர், பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷமை தேர்வு செய்ததுடன், அவர் ஆல்ரவுண்டராக அசத்துவார் என்ற நம்பிக்கையில், நீஷமையே துணை கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார்.
ஆனால் அந்த போட்டியில் நீஷமிற்கு பேட்டிங் ஆட வாய்ப்பே கிடைக்கவில்லை. பவுலிங்கிலும் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். அதில் 13 ரன்களை விட்டுக்கொடுத்து, விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. எனவே நீஷமை ட்ரீம் 11ல் துணை கேப்டனாக தேர்வு செய்த நபர், தனது மொத்த பணத்தையும் இழந்துவிட்டார்.
அந்த வேதனையை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அந்த நபர். ஜிம்மி நீஷம், உங்களை துணை கேப்டனாக தேர்வு செய்து எனது மொத்த பணத்தையும் இழந்துவிட்டேன் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு, நான் என்ன செய்வது என்ற தனது பதிலை, எனக்கு கவலையில்லை என்ற GIFஐ பகிர்ந்து அந்த ரசிகருக்கு பதிலளித்திருந்தார் ஜிம்மி நீஷம்.