ஐபிஎல் 2020: எங்கள் அணியின் அடுத்த மலிங்காவாக அவரை அடையாளம் கண்டது ரோஹித் தான்..! ஒப்புக்கொண்ட ஜெயவர்தனே

First Published 16, Oct 2020, 6:41 PM

மும்பை இந்தியன்ஸின் அடுத்த மலிங்காவாக ரோஹித் சர்மா யாரை பார்க்கிறார் என்று மஹேலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழ்வது மும்பை இந்தியன்ஸ்.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 4 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர்களில் லசித் மலிங்காவும் ஒருவர்.

ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமைக்குரிய லசித் மலிங்கா, மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்துள்ளார். ஜெயிக்கவே முடியாத சூழலில் இருந்த பல போட்டிகளில், டெத் ஓவர்களில் தனது சாமர்த்தியமான அருமையான பவுலிங்கால் மும்பை இந்தியன்ஸுக்கு வெற்றியை தேடிக்கொடுத்து, அந்த அணியின் மேட்ச் வின்னராக இருக்கிறார்.

கடந்த சீசனின் இறுதி போட்டியில் கூட சிஎஸ்கேவிற்கு எதிராக கடைசி ஓவரை அருமையாக வீசி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்து, 4வது முறையாக கோப்பையை வெல்ல உதவினார்.

இந்நிலையில், இந்த சீசனிலிருந்து மலிங்கா விலகியதால், மும்பை இந்தியன்ஸுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனால், பும்ரா, டிரெண்ட் போல்ட், ஜேம்ஸ் பாட்டின்சன் ஆகியோர் இந்த சீசனில் அருமையாக வீசிவருகின்றனர்.

நேதன் குல்ட்டர்நைல் தான் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடியிருக்க வேண்டியவர். ஆனால் இந்த சீசனின் தொடக்கத்தில் அவர் காயமடைந்து இருந்ததால், பாட்டின்சன் ஆடும் லெவனில் வாய்ப்பு பெற்றார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முதல் போட்டியிலேயே அபாரமாக வீசிய பாட்டின்சன், கேப்டன் ரோஹித் மற்றும் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றதால், குல்ட்டர்நைல் உடற்தகுதியை பெற்றபின்னரும், பாட்டின்சனே அணியில் வாய்ப்பு பெறுகிறார்.

நல்ல லைன்&லெந்த்தில், நல்ல வேரியேஷனுடன், வேகத்தை மாற்றி அருமையாக வீசுகிறார். 7 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பாட்டின்சன், இக்கட்டான நேரங்களில் அருமையாக வீசிவரும் நிலையில், அவரை மலிங்காவிற்கான சரியான மாற்றாக அடையாளம் கண்டது ரோஹித் சர்மா தான் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜெயவர்தனே, உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மலிங்காவிற்கு மாற்றாக வேறு சில பவுலர்களை நாங்கள் ஆலோசித்தோம். ஆனால், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டிற்கு பாட்டின்சன் வலுசேர்ப்பார்; அவர் தான் சரியான நபர் என்று ரோஹித் சர்மா தான் உறுதியாக நம்பினார். அணியின் சூழலுக்கு ஏற்ப, தன்னை அதற்கேற்ப தகவமைத்துக்கொண்ட பாட்டின்சன், பும்ரா மற்றும் டிரெண்ட் போல்ட்டுடன் நன்றாக செட் ஆகிவிட்டார்; அருமையாக வீசுகிறார் என்று ஜெயவர்தனே தெரிவித்தார்.

loader