கூடிய விரைவில் அந்த பையன் இந்தியாவுக்கு ஆடுவான்..! ஹர்பஜன் சிங் உறுதி

First Published 3, Nov 2020, 6:38 AM

ஐபிஎல் 13வது சீசனே முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்துள்ள நிலையில், அந்த இளம் திறமைகளில் ஒரு அபாரமான திறமையான வீரர், விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் முழுவதுமே முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்துள்ளது. படிக்கல், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய் என இளம் வீரர்கள் அசத்திவருகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் இஷான் கிஷனும் மிகச்சிறப்பாக ஆடிவருகிறார். இதற்கு முந்தைய சீசன்களைவிட இந்த சீசன் அவருக்கு சிறந்த சீசனாக அமைந்துள்ளது. ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 99 ரன்களை குவித்த இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஆடாததால் கடந்த சில போட்டிகளாக டி காக்குடன் தொடக்க வீரராக இறங்கி ஆடிவருகிறார். தொடக்க வீரராக அபாரமாக ஆடிவரும் இஷான் கிஷன், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி 47 பந்தில் 72 ரன்களை குவித்து மும்பை அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

முன்பை விட இந்த சீசனில் அவரது பேட்டிங் நன்கு மேம்பட்டுள்ளது. இந்த சீசனில் 11 போட்டிகளில் ஆடி 395 ரன்களை குவித்துள்ளார். தனது ஆட்டம் மேம்பட்டிருப்பதற்கு ராகுல் டிராவிட் தான் காரணம் என்று இஷான் கிஷன் கூறியிருந்தார்.

லெக் திசையில் அதிகம் ஆடிக்கொண்டிருந்த தனக்கு ஆஃப் திசையில் அடித்து ஆடுவதன் முக்கியத்துவத்தை உணரவைத்து, அதை ஆட கற்றுக்கொள்ள அறிவுறுத்தியது டிராவிட் தான் என்று இஷான் கிஷன் தெரிவித்திருந்தார். அந்தவகையில், தற்போது ஆஃப் மற்றும் லெக் என எல்லா திசைகளிலும் அவர் அடித்து ஆடுவதால், அவரை வீழ்த்துவது கடினமாகியிருப்பதுடன், நிறைய ஸ்கோரும் செய்துவருகிறார்.

இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பருக்கான ரேஸில் இருக்கும் இஷான் கிஷன், விரைவில் இந்திய அணியில் ஆடுவார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இஷான் கிஷனின் ஆட்டத்தை கண்ட ஆகாஷ் சோப்ரா, இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் குறித்து பேசும்போது, இஷான் கிஷனை பற்றி பேசாமல் இருக்கமுடியாது. இளம் திறமை என்று அவர் பதிவிட்டிருந்த கருத்துக்கு, ஆம்.. சூப்பர் டேலண்ட் இஷான் கிஷன் விரைவில் இந்திய அணியில் ஆடுவார் என்று ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.