அவரை ஐபிஎல் ஏலத்துல எடுக்காதது எனக்கே பெரிய ஆச்சரியம் தான்..! கம்பீர் வியப்பு

First Published 8, Nov 2020, 7:16 PM

ஜேசன் ஹோல்டரை ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலத்தில் எடுக்காதது தனக்கு வியப்பளித்ததாக கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 13வது சீசனின் 2வது பாதியில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து பிளே ஆஃபிற்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் அணி, எலிமினேட்டரில் ஆர்சிபியை வீழ்த்தி, இன்று நடக்கும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது.

ஆரம்பத்தில் வெற்றி,  தோல்வி என மாறி மாறி சந்தித்துவந்த சன்ரைசர்ஸ் அணி, ரிதிமான் சஹா மற்றும் ஜேசன் ஹோல்டரின் வருகைக்கு பிறகு தொடர் வெற்றிகளை குவித்து பிளே ஆஃபிற்கு முன்னேறியது.

ஜேசன் ஹோல்டர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தனது முழு பங்களிப்பை வழங்கி முக்கியமான போட்டிகளில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இந்த சீசனில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், சன்ரைசர்ஸ் அணிக்கு ஃபினிஷர் ரோலையும் சிறப்பாக செய்கிறார்.

சன்ரைசர்ஸ் அணியின் முக்கியமான அங்கமாக திகழும், வெஸ்ட் இண்டீஸ் கேப்டனான ஹோல்டரை ஆரம்பத்தில் எந்த அணியுமே ஏலத்தில் எடுக்கவில்லை. சன்ரைசர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயத்தால் விலகியதையடுத்து, அவருக்கு பதிலாகத்தான் ஹோல்டர் எடுக்கப்பட்டார்.

ஹோல்டரை ஏலத்தில் எந்த அணியும் எடுக்காதது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாக கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், ஜேசன் ஹோல்டர் மாதிரியான வீரரை ஏலத்தில் எடுக்காதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜிம்மி நீஷம், கிறிஸ் மோரிஸ் மற்றும் சில ஆல்ரவுண்டர்களை எடுத்தனர். ஆனால் ஒரு சர்வதேச அணியை(வெஸ்ட் இண்டீஸ்) 2 விதமான போட்டிகளில் வழிநடத்தும் கேப்டனான ஹோல்டரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது வியப்புதான். சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் வீரருக்கு அழுத்தத்தை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும் என்று தெரிவித்துள்ளார்.