ஒரு கேப்டனாக நான் பார்த்து பயந்த ஒரே வீரர் அவருதாங்க! கோலி, ஏபிடிலாம் வெத்து; அவருதான் கெத்து.. கம்பீர் அதிரடி

First Published 26, Sep 2020, 9:10 PM

தான் ஐபிஎல்லில் கேப்டன்சி செய்தவரை, ஒரு கேப்டனாக தான் பார்த்து பயந்த ஒரே பேட்ஸ்மேன் யார் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்களில் கவுதம் கம்பீரும் ஒருவர். 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களிலும் கேகேஆர் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கம்பீர்.

தன் மனதிற்கு நியாயம் என்று தெரிந்ததை வெளிப்படையாக பேசுபவர் மட்டுமல்லாது, உண்மையை பேசுபவரும் கூட. தனது கருத்தை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல சொல்பவர்.

ஐபிஎல்லில் கேகேஆர் மற்றும் டெல்லி அணிகளின் கேப்டனாக இருந்துள்ளார். கேகேஆர் அணிக்குத்தான் அதிகமான போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளதுடன், 2 முறை கோப்பையையும் வென்று கொடுத்தார்.

ஐபிஎல் 13வது சீசன் நடந்துவரும் நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் கேஎல் ராகுல் அருமையாக ஆடி சதமடித்து 132 ரன்களை குவித்திருந்த நிலையில், ராகுலை புகழ்ந்து பேசிய கம்பீர், ராகுல் ரோஹித் சர்மாவை போல் அபாரமான திறமைசாலி என்று புகழ்ந்திருந்தார். அப்போது, தன் கேப்டன்சி கெரியரில் தான் பார்த்து பயந்து ஒரே பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தான் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய கம்பீர், லெக் மற்றும் ஆஃப் ஆகிய 2 திசைகளிலும் சம அளவில் அடிக்கக்கூடிய மிகக்குறைவான பேட்ஸ்மேன்களில் கேஎல் ராகுலும் ஒருவர். ரோஹித் சர்மா 2 திசைகளிலும் அடித்து நொறுக்குவார். ரோஹித்துக்கு அடுத்து அந்த திறமை பெற்ற பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் தான். விராட் கோலி நல்ல பேட்ஸ்மேன்; ஆனால் அவர் பெரும்பாலும் லெக் திசையில் தான் அடிப்பார்.

கேஎல் ராகுல் பந்துவீச மிகக்கடினமான பேட்ஸ்மேன். ராகுல் நல்ல ஃபார்மில் அடிக்க தொடங்கிவிட்டால், எப்படி போட்டாலும் அடிப்பார். ரோஹித்தும் அப்படித்தான். ரோஹித் நல்ல ஃப்ளோவில் அடிக்க ஆரம்பித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்தவே முடியாது.

நான் கேப்டனாக இருந்தபோது, நான் பாய்ந்த ஒரே பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தான். ரோஹித் சர்மாவிற்கு 5-6 திட்டங்களை வைத்திருக்க வேண்டும். கோலி, டிவில்லியர்ஸுக்கு எதிராக 2 திட்டங்கள் போதும். டிவில்லியர்ஸ் மிஸ்டர் 360 பேட்ஸ்மேனாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எதிராக 2 திட்டங்கள் இருந்தால் போதும். ஆனால் ரோஹித்துக்கு எதிராக பலவிதமான திட்டங்களை வைத்திருக்க வேண்டும் என்று ரோஹித்தை புகழ்ந்து பேசினார் கம்பீர்.

loader