ஐபிஎல் 2020: மோர்கனால் ஒரு ஆணியும் கழட்ட முடியாது..! கம்பீர் காட்டம்

First Published 17, Oct 2020, 1:52 PM

சீசனின் இடையே கேகேஆர் அணியின் கேப்டன் மாற்றம் குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் பாதி கட்டத்தை கடந்துவிட்ட நிலையில், சீசனின் இடையே கேகேஆர் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் தினேஷ் கார்த்திக்.

கவுதம் கம்பீருக்கு பிறகு 2018லிருந்து கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்துவந்த தினேஷ் கார்த்திக், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டிக்கு முன்பாக திடீரென, கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக கேப்டன்சியிலிருந்து விலகுவதாகவும், இயன் மோர்கனை கேப்டனாக நியமிக்குமாறும் தெரிவித்திருந்தார் தினேஷ் கார்த்திக்.

தினேஷ் கார்த்திக் கேகேஆர் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியது குறித்து அந்த அணிக்கு 2 முறை கோப்பையை வென்று கொடுத்த கவுதம் கம்பீர், அதிருப்தி தெரிவித்திருந்தார். அதாவது, ஒரு பாரம்பரியத்தையும் மரபையும் உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால் அதை சிதைக்க ஒரு நிமிடம் போதும் என்று தனது அதிருப்தியையும் விரக்தியையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இயன் மோர்கன் கேப்டன்சி செய்த முதல் போட்டியிலேயே, நேற்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக படுதோல்வி அடைந்தது கேகேஆர் அணி.

இந்நிலையில், சீசனின் இடையில் கேகேஆர் அணியின் கேப்டன் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த கம்பீர், கிரிக்கெட்டில் உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது; நன்றாக ஆடுவதுதான் முக்கியம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், மோர்கனால் கேகேஆர் அணியில் எந்த மாற்றத்தையும் செய்துவிடமுடியாது. சீசனின் தொடக்கத்தில் அவரை கேப்டனாக நியமித்திருந்தால் கூட, அவரால் சில மாற்றங்களை செய்திருக்க முடியும். சீசனின் இடையில் கேப்டன்சி மாற்றம் சரியான செயல் அல்ல. கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் இடையே இருக்கும் நல்லுறவு பார்க்க நன்றாக இருக்கிறது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

loader