என் காயத்தை விட CSK டீமை விட்டு பிரியறது தான் வலிக்குது.. கண்ணீர் விட்டு கதறி அழுது பிரியாவிடை கொடுத்த பிராவோ.
2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார் சிஎஸ்கே அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர் டிவைன் பிராவோ.அவர் விலகியதை அடுத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு பிரியாவிடை கொடுத்தார். அப்போது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அவர் உருக்கமான வேண்டுகோள் வைத்தார்
தீவிரமான சிஎஸ்கே ரசிகர்கள் அவர் பிரிவை தாங்காமல் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், தொடரில் துவக்கத்தில் காயத்தால் சில போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார் டிவைன் பிராவோ. பின் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி தோல்விகள் அடைந்த பின் அணியில் சேர்க்கப்பட்டார். பிராவோ வந்த பின் பந்துவீச்சு பலம் அடைந்தது.
ஆனாலும், சிஎஸ்கே அணி தொடரில் தொடர்ந்து தோல்விகள் அடைந்து வந்தது. இதற்கிடையே பிராவோ டெல்லி போட்டியில் காயத்தால் பாதியில் விலகினார். அவர் கடைசி ஓவரில் பந்து வீச முடியாததால் அந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது
தான் விலகியதை அடுத்து அவர் வெளியிட்ட வீடியோவில் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். "இது வருத்தமான செய்தி. என் அணி சிஎஸ்கேவை விட்டு விலகுவது வருத்தமாக உள்ளது. நம் சிஎஸ்கே ரசிகர்கள் அணியை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்" என்றார் பிராவோ.
மேலும், "இந்த சீசன் நாங்கள் எதிர்பார்த்தது போல அமையவில்லை. நம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவும் எதுவும் நடக்கவில்லை. நாங்கள் எங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தோம். ஆனாலும், அது முடிவில் பிரதிபலிக்கவில்லை" என உருக்கமாக பேசினார் பிராவோ. அவரது பதிவின் கீழ் ரசிகர்கள் கண்ணீர் விடும் ஈமோஜிக்களை பதிவிட்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.