சென்னையிலிருந்து புறப்பட்ட சிஎஸ்கே சிங்கங்கள்..! சூடுபிடிக்கும் ஐபிஎல்
ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில், நேற்று முதல் ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல தொடங்கின. ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் நேற்றே அங்கு சென்றுவிட்ட நிலையில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகத்தினர், உதவியாளர்கள் என மொத்தம் 60 பேர் தனிவிமானம் மூலம் இன்று சென்னையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
சிஎஸ்கே வீரர்கள் கடந்த 15ம் தேதியிலிருந்து சென்னையில் 5 நாட்கள் பயிற்சி முகாமில் ஈடுபட்டிருந்தனர்.
ஐபிஎல் கோப்பையை நான்காவது முறையாக தூக்கும் முனைப்பில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முகத்தில் புன்னகையுடன் கெத்தாக கிளம்பிய தல தோனி
சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரும் சின்ன தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தோனியின் தளபதியான ரெய்னாவும் தோனியை போலவே மிகுந்த உற்சாகத்துடன் சிரிப்புடன் புறப்படுகிறார்.
சிஎஸ்கே பயிற்சி முகாமில் கலந்துகொள்ளாவிட்டாலும், துபாய்க்கு புறப்படும் முன் சென்னைக்கு வந்து, சிஎஸ்கே அணியுடன் இணைந்து புறப்பட்டார் ஜடேஜா.
துபாய்க்கு பெட்டியுடன் புறப்பட்ட சிஎஸ்கே வீரர்
ஐபிஎல் கோப்பையை மறுபடியும் வெல்லும் வேட்கையில், சிஎஸ்கேவின் சிங்கங்கள்