ஐபிஎல் 2020: பாண்டிங்கே செலக்ட் பண்ணிருக்காருனா சும்மாவா..? டெல்லி கேபிடள்ஸின் தெறி லெவன்

First Published 25, Sep 2020, 5:30 PM

ஐபிஎல் 13வது சீசனில் சிஎஸ்கேவிற்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் டெல்லி கேபிடள்ஸின் உத்தேச ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. துபாயில் இன்று நடக்கும் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் டெல்லி கேபிடள்ஸ் அணி, தோனி தலைமையிலான அனுபவம் வாய்ந்த சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான விறுவிறுப்பான முதல் போட்டியில், சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று, வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணி, சிஎஸ்கேவையும் வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில் கடந்த போட்டியில் ராஜஸ்தானிடம் அடி வாங்கிய சிஎஸ்கே, இந்த போட்டியில் வெற்றி பெறும் தீவிரத்தில் உள்ளது. எனவே இளமையும் அனுபவமும் மோதும் இந்த போட்டி கடுமையாக இருக்கும்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரிஷப் பண்ட்டை தவிர வேறு ஃபினிஷரே இல்லாமல் இருந்தது. அவரையும் ஃபினிஷர் என்று சொல்ல முடியாது. 4ம் வரிசையிலேயே பெரும்பாலும் கடந்த சீசனில் இறங்கிவந்தார். எனவே ஒரு தரமான ஃபினிஷர் வேண்டுமென்ற முனைப்பில், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி ஆகிய ஆஸ்திரேலிய அதிரடி வீரர்களை டெல்லி அணியில் அதன் தலைமை பயிற்சியாளர் பாண்டிங் எடுத்தார்.

பாண்டிங்கின் நம்பிக்கையை வீணடிக்காமல், முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறந்த பங்காற்றி, ஆட்டநாயகன் விருதை வென்றார் மார்கஸ் ஸ்டோய்னிஸ்.

முதல் போட்டியின் பாதியில் காயத்தால் அஷ்வின் வெளியேறியிருந்தார். அவர் காயத்திலிருந்து மீண்டுவிட்டதால், அவரும் சிஎஸ்கேவிற்கு எதிரான இன்றைய போட்டியில் கண்டிப்பாக ஆடுவார்.

எனவே டெல்லி கேபிடள்ஸ் அணி, அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

டெல்லி கேபிடள்ஸ் உத்தேச ஆடும் லெவன்:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷிம்ரான் ஹெட்மயர், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, மோஹித் சர்மா.

loader