DC vs CSK: அப்பா புண்ணியவானே நீ பண்ண வரைக்கும் போதும்; கிளம்பு..! சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான அனுபவம் வாய்ந்த சிஎஸ்கே அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளமையான டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன.
துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் லுங்கி இங்கிடி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.
லுங்கி இங்கிடி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகவும் பெரியளவில் சிறப்பாக வீசவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான கடந்த போட்டியில், கடைசி ஓவரில் ஆர்ச்சரையே 4 சிக்ஸர்கள் அடிக்கவிட்டார். ஒரு பேட்ஸ்மேன் 4 சிக்ஸர்கள் அடித்திருந்தால் கூட பரவாயில்லை. ஆர்ச்சருக்கே 4 சிக்ஸர்கள் கொடுத்து, 2 நோ பால்கள், வைடு என கடைசி ஓவரில் 30 ரன்களை வாரி வழங்கினார் இங்கிடி.
19 ஓவரில் 186 ரன்கள் அடித்திருந்த ராஜஸ்தான் அணி, 20 ஓவரில் 216 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடிக்க முக்கிய காரணமாக இருந்தார். அவரது பவுலிங் படுமோசமாக இருந்ததுடன், சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. எனவே இந்த போட்டியில் அவர் நீக்கப்பட்டு, ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் ராயுடு ஆடமாட்டார் என்பதை ஏற்கனவே அந்த அணி உறுதி செய்துவிட்டது.
சிஎஸ்கே ஆடும் லெவன்:
ஷேன் வாட்சன், முரளி விஜய், ஃபாஃப் டுப்ளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், தோனி(கேப்டன்,விக்கெட் கீப்பர்), சாம் கரன், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.