ஐபிஎல் 2020: சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம குட் நியூஸ் சொன்ன தல தோனி

First Published 26, Sep 2020, 2:47 PM

டெல்லி கேபிடள்ஸிடம் படுதோல்வி அடைந்த பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி அதிரடி மாற்றங்களுடன் அதகளம் செய்யும் என்ற நம்பிக்கையை ஊட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு இந்த சீசனின் தொடக்கம் சிறப்பாக இல்லை. இந்த சீசனில் ரெய்னா ஆடாத நிலையில், அதன் தாக்கம் சிஎஸ்கேவில் கடுமையாக உள்ளது.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில், அம்பாதி ராயுடுவின் அதிரடியான அரைசதத்தால் வென்ற சிஎஸ்கே, அடுத்த 2 போட்டிகளில் ராயுடு ஆடாததால், படுமோசமாக சொதப்பி, 2 போட்டிகளிலுமே படுமோசமாக தோற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற சிஎஸ்கே அணி, டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 176 ரன்கள் என்ற இலக்கைக்கூட அடிக்கமுடியாமல் 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

டுப்ளெசிஸை தவிர வேறு யாருமே சரியாக ஆடுவதில்லை. ஷேன் வாட்சனுக்கு இன்னும் முமெண்டம் கிடைக்கவில்லை. முரளி விஜயை அணியில் எடுப்பதற்கு எடுக்காமலேயே இருக்கலாம். அடுத்த போட்டியில் ராயுடு ஆடுவார் என்பதால் முரளி விஜய் ஒதுக்கப்படுவார். இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், தனக்கு கிடைத்த 2 அரிய வாய்ப்புகளையும் வீணடித்துவிட்டார். ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே அணியே சிதைந்து போய் கிடக்கிறது.

அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய், முருகன் அஷ்வின், ஷ்ரேயாஸ் கோபால், ராகுல் டெவாட்டியா, சாஹல் என எதிரணி ஸ்பின்னர்கள் அசத்தலாக வீசிவரும் நிலையில், சிஎஸ்கேவின் சீனியர் ஸ்பின்னர்களான ஜடேஜாவும் சாவ்லாவும் சொதப்பிவருகின்றனர். அனைத்துவகையிலுமே படுமோசமாக சொதப்பி 2 படுதோல்விகளை சிஎஸ்கே பெற்றுள்ளது.

சிஎஸ்கே அணியின் பேட்டிங், ஸ்பின் பவுலிங், டெத் பவுலிங் என அனைத்துவிதத்திலுமே பிரச்னை இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அதன் விளைவாகத்தான், சிஎஸ்கே 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. சிஎஸ்கே பொதுவாக தோற்றாலும் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் எல்லாம் தோற்கும் அணியே கிடையாது. கடைசி வரை போராடி சிறிய அளவிலான வித்தியாசத்தில் தான் தோற்கும். ஆனால் கடந்த 2 போட்டிகளில் ஆட்டத்தின் பாதியிலேயே தோல்வி உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, சிஎஸ்கே அணியில் சிக்கல்களை சுட்டிக்காட்டினார். டாப் ஆர்டர் பேட்டிங்கின் மந்தமான தொடக்கம், அதனால் பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு மிடில் ஓவர்களிலும் டெத் ஓவர்களிலும் அதிகரிக்கும் அழுத்தம் ஆகியவற்றை சுட்டிக்காட்டினார் தோனி.

கண்டிப்பாக சிஎஸ்கே அணி ஆடும் லெவன் காம்பினேஷனில் மாற்றத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், ராயுடுவின் கம்பேக்கை ரசிகர்கள் எதிர்நோக்கியிருக்கும் நிலையில், அதுகுறித்த நற்செய்தியையும் தோனி தெரிவித்தார்.

”சரியான மற்றும் வலுவான அணி காம்பினேஷனுடன் களமிறங்கிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அடுத்த போட்டிக்கு ராயுடு வந்துவிடுவார். எனவே இதுவரை சரியாக ஐந்து பவுலர்களுடன் களமிறங்கிய எங்களுக்கு கூடுதலாக ஒரு பவுலரை சேர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கு. அது அணி காம்பினேஷனுக்கு வலு சேர்க்கும். மேலும் சில மாற்றங்களை எதிர்நோக்கியுள்ளோம். மேலும் பவுலர்கள் சரியான லைன்&லெந்த்தில் வீச வேண்டியது அவசியம்” என்று தோனி தெரிவித்தார்.

இனிமேல் அக்டோபர் 2ம் தேதி தான் சிஎஸ்கேவிற்கு அடுத்த போட்டி. ஒருவார காலம் அவகாசம் இருப்பதால், கண்டிப்பாக சன்ரைசர்ஸுக்கு எதிரான அடுத்த போட்டியில் சிஎஸ்கே வேற லெவலில் கம்பேக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

loader