ஐபிஎல் 2020: சிஎஸ்கே ரசிகர்களுக்கு இதைவிட கெட்ட செய்தி இருக்க முடியாது..! அதிர்ச்சியளித்த ஸ்டீஃபன் ஃப்ளெமிங்

First Published 18, Oct 2020, 1:41 PM

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவின் தொடர் தோல்விகளால் ஏற்கனவே சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் இருக்கும் நிலையில், மேலும் அதிர்ச்சியளிக்கும் செய்தியை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு கொடுங்கனவாக அமைந்துள்ளது. இந்த சீசனில் இதுவரை ஆடிய 9 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது சிஎஸ்கே அணி.

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் நேற்று டெல்லி கேபிடள்ஸை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் ஆடிய 179 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, சிறிய மைதானமான ஷார்ஜாவில் 180 ரன்கள் என்ற பெரிய கடினமில்லாத இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்தது.

ஆனாலும் தவானை தவிர டெல்லி அணியின் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால் சிஎஸ்கே அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. டெல்லி அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட, களத்தில் தவான் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய 2 இடது கை பேட்ஸ்மேன்கள் நிற்க, யாருமே எதிர்பார்த்திராத விதமாக இடது கை ஸ்பின்னர் ஜடேஜாவிடம் பந்தை கொடுத்தார் தோனி.

இது அனைவருக்குமே அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது. பிராவோவிடம் கொடுக்காமல் தோனி ஏன் ஜடேஜாவிடம் கொடுத்தார் என்ற கேள்வி எழுந்தது. ஜடேஜா வீசிய கடைசி ஓவரில் அக்ஸர் படேல் அசால்ட்டாக 3 சிக்ஸர்களை விளாசி டெல்லி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, பிராவோ ஃபிட்டாக இல்லாததால் களத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவரால் பந்துவீச முடியாததால் தான், வேறு வழியே இல்லாமல் ஜடேஜாவிடம் கடைசி ஓவரை கொடுத்ததாக தெரிவித்தார்.

அருமையான ஆல்ரவுண்டரான பிராவோ ஆரம்பத்தில் சில போட்டிகளில் ஆடாததால்தான், அணி காம்பினேஷன் சரியாக இல்லாமல் சிஎஸ்கே தோல்விகளை தழுவியது. முழு உடற்தகுதியுடன் பிராவோ வந்ததால் அணி காம்பினேஷன் வலுப்பெற்றிருந்த நிலையில், தற்போது பிராவோ காயமடைந்திருப்பது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில், பிராவோ உடற்தகுதி குறித்து சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் கூறியிருக்கும் கருத்து, ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை அதிகரித்துள்ளது.

பிராவோ குறித்து பேசிய ஃப்ளெமிங், பிராவோவுக்கு துரதிர்ஷ்டவசமாக வலது தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் தான் அவர் களத்தைவிட்டு வெளியேற நேர்ந்தது. அதனால் தான் கடைசி ஓவரை அவரால் வீச முடியவில்லை. டெத் ஓவர்களை அருமையாக வீசுவதில் வல்லவர் பிராவோ. இதுபோன்ற பல இக்கட்டான தருணங்களில் கடைசி ஓவரை சாமர்த்தியமாக வீசி சிஎஸ்கேவிற்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார் பிராவோ.

ஆனால் காயத்தால் கடைசி ஓவரை வீச முடியாதது குறித்து மிகவும் வேதனை தெரிவித்தார் பிராவோ. பிராவோவால் வீசமுடியாததால் தான், வேறு வழியில்லாமல் கடைசி ஓவரை ஜடேஜாவிடம் கொடுக்க வேண்டியதாயிற்று. பிராவோ இன்னும் 2 வாரங்கள் ஓய்வெடுக்க நேரிடும் என்றார் ஃப்ளெமிங்.

இன்னும் 2 வாரங்கள் எனும்போது, கிட்டத்தட்ட இந்த சீசனில் இனிமேல் பிராவோ ஆட வாய்ப்பில்லை.

loader