ஐபிஎல் 2020: பிராவோவுக்கு மாற்று வீரர்..? சிஎஸ்கே சி.இ.ஓ முக்கிய தகவல்

First Published 18, Oct 2020, 11:03 PM

பிராவோவிற்கான மாற்று வீரர் குறித்து சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் சிஎஸ்கே அணிக்கு கொடுங்கனவாக அமைந்திருக்கிறது. ரெய்னா, ஹர்பஜன் சிங் இந்த சீசனில் ஆடாதது, தொடர் தோல்விகள், சரியான அணி காம்பினேஷன் இல்லாதது, கேதர் ஜாதவின் சொதப்பல், பிராவோவின் காயம் என சிஎஸ்கே அணி எல்லா வகையிலும் படாதபாடு பட்டுவருகிறது.

தொடர் தோல்விகளுக்கு பிறகு, சன்ரைசர்ஸுக்கு எதிராக வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்கியது. ஆனால் ஜெயிக்க வேண்டிய போட்டியில் பிராவோ கடைசி ஓவரை வீச முடியாததால், ஜடேஜாவை வீசவைக்க வேண்டிய கட்டாயத்தில், கடைசி ஓவரை அவரை வீசவைத்து ஒரே ஓவரில் வெற்றியை தாரைவார்த்தது சிஎஸ்கே அணி.

பிராவோ வலது தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் களத்தை விட்டு வெளியேறியதால், அவரால் பந்துவீச முடியவில்லை என்பதை போட்டிக்கு பின்னர் கேப்டன் தோனியும், தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங்கும் தெரிவித்தார்.

பிராவோ அடுத்த 2 வாரங்களுக்கு ஆடமுடியாமல் போகலாம் என்பதை ஸ்டீஃபன் ஃப்ளெமிங்கே தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதையே தான் சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதனும் தெரிவித்துள்ளார். ஆனால் பிராவோவிற்கு மாற்று வீரரை எடுக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன், பிராவோவிற்கு மாற்று வீரரை எடுக்கும் எண்ணம் இல்லை. ஏனெனில் மாற்று வீரரை எடுத்தால், அவர் ஒரு வாரம் குவாரண்டினில் இருக்க வேண்டும். அதன்பின்னர் தான் அணியுடன் இணைய முடியும். பிராவோவிற்கு பெரிய காயம் கிடையாது. எனினும் பிராவோ இல்லையென்றாலும் கூட, மாற்று வீரர் எடுக்கும் எண்ணம் இல்லை என்றார்.

ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் இந்த சீசனிலிருந்து விலகிய நிலையில், அவர்களுக்கான மாற்று வீரர்கள் கூட எடுக்கப்படவில்லை. சீசனின் தொடக்கத்திலேயே விலகிய வீரர்களுக்கே மாற்று வீரர்கள் எடுக்கப்படவில்லை எனும்போது, சீசனின் இடையில் ஆடமுடியாமல் போகும் பிராவோவிற்கு மாற்று வீரர் எடுக்க வேண்டும் என்று சிஎஸ்கேவிடம் எதிர்பார்க்க முடியாது.

loader