ஆர்சிபிக்கு எதிராக அருமையான பவுலிங்.. சிஎஸ்கேவிற்கு ஆறுதல் வெற்றி வாய்ப்பு
ஆர்சிபி அணியை 20 ஓவரில் 145 ரன்களுக்கு சுருட்டியது சிஎஸ்கே அணி.
ஐபிஎல் 13வது சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட சிஎஸ்கே அணி, இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில், இன்று ஆர்சிபியை எதிர்கொண்டு ஆடிவருகிறது. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக களத்திற்கு வந்த ஆரோன் ஃபின்ச்சும்(15), தேவ்தத் படிக்கல்லும்(22) பவர்ப்ளேயில் தங்களது பணியை சரியாக செய்து கொடுத்தனர். 6.1 ஓவரில் 46 ரன்களுக்கு ஆர்சிபி அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின்னர் கோலியும் டிவில்லியர்ஸும் ஜோடி சேர்ந்தனர். அந்த ஜோடியை நிலைக்க விடாமல் பிரிக்க, இம்ரான் தாஹிர் மற்றும் சாண்ட்னெருக்கு தொடர்ச்சியாக ஓவர்களை கொடுத்தார் தோனி. ஆனாலும் இருவரும் இம்ரான் தாஹிரின் லெக் ஸ்பின்னை சமாளித்து ஆடி களத்தில் நிலைத்தனர். இருவரும் இணைந்து 11 ஓவரில் 82 ரன்களை சேர்த்தனர்.
சிஎஸ்கே அணி:
டுப்ளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், ராயுடு, ஜெகதீசன், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஜடேஜா, மிட்செல் சாண்ட்னெர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், மோனு குமார்.
சிஎஸ்கே அணி, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட போதிலும், 146 ரன்கள் என்பது அடிக்கக்கூடிய இலக்குதான் என்பதால், சிஎஸ்கே அணி ஆறுதல் வெற்றியை பெற இது நல்ல வாய்ப்பு.