ஐபிஎல் 2020: சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட்டும் காலி.. சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய சீனியர் வீரர்

First Published 21, Oct 2020, 4:28 PM

ஐபிஎல் 13வது சீசனிலிருந்து சிஎஸ்கே அணியின் சீனியர் வீரர் முழுவதுமாக விலகியுள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் சிஎஸ்கே அணிக்கு கொடுங்கனவாக அமைந்திருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ஆடிய 10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது.

இதற்கு முன் ஆடிய அனைத்து சீசன்களிலும் வெற்றி பெற்ற அணி என்ற சாதனைக்கும் பெருமைக்கும் சொந்தக்கார சிஎஸ்கே அணி, அந்த பெருமையை இந்த சீசனில் இழக்கிறது.

இந்த சீசன் தொடக்கம் முதலே சிஎஸ்கே அணிக்கு சரியாக அமையவில்லை. எல்லா விதத்திலும் பெரும் பின்னடைவாகவே அமைந்திருக்கிறது. ரெய்னா, ஹர்பஜன் சிங் இந்த சீசனில் ஆடாதது, தொடர் தோல்விகள், சரியான அணி காம்பினேஷன் இல்லாதது, கேதர் ஜாதவின் சொதப்பல், பிராவோவின் காயம் என சிஎஸ்கே அணி எல்லா வகையிலும் படாதபாடு பட்டுவருகிறது.

சீசனின் தொடக்கத்தில் பிராவோ ஃபிட்டாக இல்லாதது, அணி காம்பினேஷனை பாதித்தது. அதனால் தொடர் தோல்விகளை தழுவிவந்த சிஎஸ்கே அணிக்கு பிராவோ வந்தபிறகு அணி காம்பினேஷன் வலுவாக அமைந்தது. ஏனெனில் சீனியர் ஆல்ரவுண்டரான பிராவோ, இக்கட்டான நேரங்களில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடியவர். அப்படியான பங்களிப்பை பலமுறை சிஎஸ்கே அணிக்காக வழங்கி மேட்ச் வின்னராக திகழ்ந்திருக்கிறார்.

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸூக்கு எதிரான போட்டியில் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டதால் களத்தை விட்டு பிராவோ வெளியேறியதால் அவரால் கடைசி ஓவரை வீசமுடியவில்லை. அதனால் ஜடேஜாவை கடைசி ஓவரை வீச வைக்க வேண்டிய நிலை உருவானது. ஜடேஜாவின் பவுலிங்கை பொளந்துகட்டி அக்ஸர் படேல் டெல்லி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

அந்த போட்டியில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பின் காரணமாக பிராவோ இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். இன்னும் 2-3 நாட்களில் வெஸ்ட் இண்டீஸுக்கு கிளம்பிவிடுவார் என்பதை சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிஎஸ்கே அணி இந்த சீசனில் எப்படியும் பிளே ஆஃபிற்கு முன்னேறப்போவதில்லை என்பதால், பிராவோவுக்கு மாற்று வீரரையெல்லாம் சிஎஸ்கே அணி தேடவேயில்லை. எந்த மாற்றமாக இருந்தாலும், சீர்திருத்தமாக இருந்தாலும் அடுத்த சீசனில் ஃப்ரெஷ்ஷாக பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் சிஎஸ்கே அணி உள்ளது.

loader