ஷமி Bhai, நீங்கதான் ஆட்டநாயகன்.. உங்களால் முடியும்னு எனக்கு தெரியும்..! யுனிவர்ஸ் பாஸ் புகழாரம்

First Published 19, Oct 2020, 1:28 PM

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான த்ரில்லான போட்டியில் பஞ்சாப் அணி 2வது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற நிலையில், அந்த போட்டியின் ஆட்டநாயகன் ஷமி தான் என்று அவரை வெகுவாக புகழ்ந்துள்ளார் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல்.

ஐபிஎல் 13வது சீசனில் ஜெயிக்க வேண்டிய பல போட்டிகளில், வெற்றிக்கு அருகில் வந்து கடைசி நேர சொதப்பலால் நூலிழையில் பல வெற்றிகளை தவறவிட்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, வெற்றி கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸை நேற்று எதிர்கொண்டது.

சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் கடுமையாக போராடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 2வது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்ட முதல் போட்டி இதுதான்.

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்த 177 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 176 ரன்கள் அடிக்க, போட்டி டை ஆனது. இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணியை ஐந்து ரன்களுக்கு சுருட்டினார் பும்ரா.

நீ(பும்ரா) ஐந்து ரன்களுக்கு சுருட்டினால், என்னால் முடியாதா என்கிற ரீதியில், ரோஹித் மற்றும் டி காக்கை ஆறு ரன்கள் எளிய இலக்கை சூப்பர் ஓவரில் அடிக்கவிடாமல், துல்லியமான யார்க்கர்களை வீசி ஐந்து ரன்களுக்கு ஷமி சுருட்ட, சூப்பர் ஓவரும் டை ஆனது.

பின்னர் 2வது சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 ரன்கள் அடிக்க, 12 ரன்கள் என்ற இலக்கை கெய்லும் மயன்க் அகர்வாலும் இணைந்து அடித்தனர்.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 2வது சூப்பர் ஓவர் வரை சென்ற ஒரு போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது பஞ்சாப் அணி. மெயின் மேட்ச்சில் பஞ்சாப் அணி சார்பில் தனி ஒருவனாக இலக்கை விரட்ட போராடி 77 ரன்கள் அடித்து, வெற்றிக்கு அழைத்து சென்ற ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டி குறித்து பேசிய யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல், ஷமி Bhai நீங்கள் தான் ஆட்டநாயகன். ரோஹித்தையும் டி காக்கையும் ஆறு ரன்கள் அடிக்கவிடாமல் சூப்பர் ஓவரில் கட்டுப்படுத்துவது என்பது அபாரம். நான் உங்கள்(ஷமி) பவுலிங்கை வலைப்பயிற்சியில் எதிர்கொண்டிருக்கிறேன். உங்களால் துல்லியமாக யார்க்கர்களை வீசமுடியும் என்பது எனக்கு தெரியும். அந்த யார்க்கர்களின் மூலம் வெற்றியை பெற்று கொடுத்திருக்கிறீர்கள். 2வது சூப்பர் ஓவரை ஜோர்டானும் சூப்பராக வீசினார். மயன்க் அகர்வால் அருமையான ஃபீல்டிங்கின் மூலம் ஐந்து ரன்களை காப்பாற்றி கொடுத்தார். வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் பெற்ற வெற்றியில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம் என்பதே பெருமகிழ்ச்சி என்றார் கெய்ல்.