ஐபிஎல் 2020: ரசிகர்களுக்கு யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லின் உருக்கமான மெசேஜ்

First Published 3, Nov 2020, 7:52 AM

ஐபிஎல் ரசிகர்களுக்கு யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் உருக்கமான மெசேஜ் ஒன்றை கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் 13வது சீசன், இதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களை விட மிகவும் விறுவிறுப்பானது. ஏனெனில் கடைசி லீக் போட்டி வரை டாப் 4 அணிகள் உறுதியாகவில்லை. அந்தவகையில், இந்த சீசன் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது.

இந்த சீசனிலாவது முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் வழிகாட்டுதலில், கேஎல் ராகுலின் கேப்டன்சியில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சீசன் முழுவதும் மிகச்சிறப்பாக ஆடியபோதிலும், துரதிர்ஷ்டவசமாக நூலிழையில் பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது. 12 புள்ளிகளுடன் பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் வெளியேறியது.

இந்த சீசனில் முதல் 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்ற பஞ்சாப் அணி, யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்லின் வருகைக்கு பிறகு அடுத்த 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றது. கெய்ல் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்ட பிறகே, பஞ்சாப் அணியின் தன்னம்பிக்கையிலும் அணுகுமுறையிலும் ஆட்டத்திலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

சீசனின் பாதிக்கு மேல் ஆடும் வாய்ப்பு பெற்றாலும், தான் யுனிவர்ஸ் பாஸ் என்பதை நிரூபிக்கும் வகையில் சில அபாரமான இன்னிங்ஸ்களை ஆடி அசத்தினார். 7 போட்டிகளில் ஆடி 288 ரன்களை குவித்தார் கெய்ல். இந்த சீசனில் 23 சிக்ஸர்களை விளாசிய கெய்ல், டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார்.

கெய்ல் அபாரமாக ஆடியிருந்தாலும், இந்த சீசனில் பஞ்சாப் அணியால் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியாமல் போனது. இந்நிலையில், இந்த சீசனில் தன்னுடைய பயணம் முடிவுக்கு வந்திருந்தாலும், ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

41 வயதான கிறிஸ் கெய்லுக்கு பெரும்பாலும் இதுவே கடைசி சீசனாக அமைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.