டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த கெய்ல்..!

First Published 30, Oct 2020, 10:19 PM

டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளார் கெய்ல்.

யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல், டி20 கிரிக்கெட்டின் வெற்றிகரமான வீரர். சர்வதேச டி20 கிரிக்கெட் மற்றும் ஐபிஎல், கரீபியன் பிரீமியர் லீக் உட்பட பல டி20 லீக் தொடர்களில் ஆடி உலகம் முழுதும் அசத்திவருகிறார்.

குறிப்பாக ஐபிஎல்லில் கெய்ல், எதிரணிகளை அச்சுறுத்தும் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர். ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள்(349), ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர்(175), அதிக சதங்கள்(6) ஆகிய பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் கெய்ல்.

இந்த சீசனில் பஞ்சாப் அணியில் அவர் ஆடாத முதல் 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த பஞ்சாப் அணி, அவர் அணிக்கு வந்த பின்னர் ஆடிய ஐந்து போட்டிகளையும் வரிசையாக வென்றது. இன்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியிலும் கெய்ல் அருமையாக ஆடி, பஞ்சாப் அணிக்கு தொடர்ச்சியாக ஆறாவது வெற்றிக்கு தேவையான அடித்தளத்தை கெய்ல் அமைத்து கொடுத்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் கெய்ல் அதிரடியாக ஆடி 63 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும்  8 சிக்ஸர்களுடன் 99 ரன்கள் அடித்து, சதமடிக்க முடியாமல் 99 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில், கார்த்திக் தியாகி வீசிய 19வது ஓவரில் அவர் அடித்த, இன்றைய இன்னிங்ஸில் அவரது 7வது சிக்ஸர் டி20 கிரிக்கெட்டில் கெய்லின் 1000வது சிக்ஸர்.

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் கெய்ல். 690 சிக்ஸர்களுடன் பொல்லார்டு 2ம் இடத்திலும் 458 சிக்ஸர்களுடன் மெக்கல்லம் 3ம் இடத்திலும் உள்ளனர்.