ஐபிஎல் 2020: ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை சூப்பர் ஓவருக்கு கொண்டு போறாய்ங்க..! கெய்ல் செம கடுப்பு

First Published 19, Oct 2020, 5:30 PM

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக எளிதாக ஜெயிக்க வேண்டிய போட்டியை சூப்பர் ஓவர் வரை கொண்டு சென்றதால் பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் செம கடுப்பாகிவிட்டார்.

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தொடக்கம் முதலே ஜெயிக்க வேண்டிய போட்டிகளில் எல்லாம் தோற்றுவருகிறது.

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் ஜெயிக்க வேண்டிய போட்டியை சூப்பர் ஓவர் வரை கொண்டு சென்று தோற்ற பஞ்சாப் அணி, கேகேஆருக்கு எதிராகவும் ஜெயிக்க வேண்டிய போட்டியில் கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. இப்படியாக பல வென்றிருக்க வேண்டிய போட்டிகளில் கடைசி சில ஓவர்களில் செய்த தவறால் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளை தழுவிவந்தது.

இந்நிலையில், கடந்த 2 போட்டிகளில், வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு, 7ம் இடத்திற்கு முன்னேறி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 2வது சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெற்றிருந்தாலும், முன்பே ஜெயித்திருக்க வேண்டிய போட்டியை சூப்பர் ஓவரை கொண்டு சென்றனர். கடைசி பந்தில் 2வது ரன் ஓடும்போது, ஜோர்டான் ரன் அவுட்டானதால் போட்டி டை ஆனது. ஜோர்டான் நேராக ரன் ஓடியிருந்தால் எளிதாக அந்த ரன்னை ஓடி முடித்து வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அவர் வளைந்து ஓடியதால் டைமிங் போதாமல் ரன் அவுட்டானார்.

இதையடுத்து வீசப்பட்ட முதல் சூப்பர் ஓவரும் டையில் முடிய, 2வது சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 12 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு, முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி வெற்றியை உறுதி செய்தார் யுனிவர்ஸ் பாஸ் கெய்ல். பின்னர் 2 பவுண்டரிகள் அடித்து மயன்க் வெற்றிகரமாக முடித்துவைத்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், சூப்பர் ஓவர் கொண்டு சென்றதால் கெய்ல் கோபமடைந்துவிட்டார். போட்டிக்கு பின்னர் மயன்க் அகர்வால் மற்றும் ஷமியிடம் பேசிய கெய்லிடம், 2வது சூப்பர் ஓவரில் பேட்டிங் ஆட சென்றபோது பதற்றமாக இருந்ததா என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கெய்ல்,  பதற்றமெல்லாம் இல்லை; கடுப்பாகத்தான் இருந்தது. எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியை சூப்பர் ஓவர் வரை எடுத்துச்சென்று நம்மை நாமே அழுத்தத்திற்கு உள்ளாக்கியது கடுப்பாகத்தான் இருந்தது. ஆனால் கிரிக்கெட்டில் இதெல்லாம் நடக்கும் என்று கெய்ல் தெரிவித்தார்.

loader