ஐபிஎல் 2020: என்னது அவரே டீம்ல இல்லையா..? சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும் ஆடும் லெவன்
ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் இளம் அணியான டெல்லி கேபிடள்ஸை அனுபவம் வாய்ந்த அணியான சிஎஸ்கே எதிர்கொள்ளவுள்ள நிலையில், சிஎஸ்கேவின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் சிஎஸ்கேவும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன.
தோனி தலைமையிலான ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், முரளி விஜய், கேதர் ஜாதவ், ஜடேஜா, பியூஷ் சாவ்லா என முழுக்க முழுக்க அனுபவம் வாய்ந்த சிஎஸ்கே அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ரபாடா, ஹெட்மயர் ஆகிய இளம் வீரர்களை கொண்ட டெல்லி கேபிடள்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச சிஎஸ்கே அணியை பார்ப்போம்.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இந்த சீசனின் முதல் போட்டியில் அபாரமாக ஆடி, பும்ரா, டிரெண்ட் போல்ட் ஆகிய உலகின் டாப் 2 பவுலர்களின் பவுலிங்கையும் பொளந்துகட்டி, 48 பந்தில் 71 ரன்களை குவித்து சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த அம்பாதி ராயுடு, முழு ஃபிட்னெஸுடன் இல்லாததால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஆடவில்லை.
டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் ராயுடு ஆடமாட்டார் என்பதை உறுதி செய்துவிட்டனர். சன்ரைசர்ஸுக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் தேறிவிடுவார் என்று நம்புவதாக சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார். எனவே ராயுடு இந்த போட்டியிலும் ஆடமாட்டார்.
அதனால் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் சிஎஸ்கே அணி களமிறங்கும். அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.
சிஎஸ்கே உத்தேச ஆடும் லெவன்:
ஷேன் வாட்சன், முரளி விஜய், ஃபாஃப் டுப்ளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், தோனி(கேப்டன்,விக்கெட் கீப்பர்), சாம் கரன், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, தீபக் சாஹர், லுங்கி இங்கிடி.