ஐபிஎல் 2020: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைகிறார் மிகப்பெரிய மேட்ச் வின்னர்..! இனிதான் இருக்கு கச்சேரி

First Published 3, Oct 2020, 12:53 PM

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னர் இணைகிறார்.

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சிஎஸ்கே, இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

வழக்கத்திற்கு மாறாக, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் டாப்பில் இருக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் அருமையாக ஆடிவருகிறது. முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அணியில் பட்லர், ஆர்ச்சர், சாம்சன் என பல மேட்ச் வின்னர்கள் உள்ளனர். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில், ஐபிஎல்லின் அதிகபட்ச இலக்கை விரட்டி வெற்றி பெற காரணமாக இருந்த ராகுல் டெவாட்டியாவும் புதிய மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார்.

சிஎஸ்கே, பஞ்சாப் ஆகிய அணிகளை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆரிடம் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணியில் டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங் யூனிட்டும் சிறப்பாக இருந்தபோதிலும் மிரட்டலான ஃபினிஷர் இல்லாமல் தவித்துவருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் பலவீனமான மிடில் ஆர்டருக்கு வலுசேர்க்கும் விதமாகவும், அணியின் பேலன்ஸை வலுப்படுத்தும் விதமாகவும் பென் ஸ்டோக்ஸ் அணியில் இணைகிறார்.

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் தனது 100 சதவிகித பங்களிப்பை அளித்து, மேட்ச் வின்னராக ஜொலிக்கக்கூடியவர் பென் ஸ்டோக்ஸ். அவர் நியூசிலாந்தில் தனது குடும்பத்துடன் இருப்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணிக்காகக்கூட ஆடாமல் நியூசிலாந்து சென்றிருந்தார். அதனால் ஐபிஎல்லின் முதல் சில போட்டிகளிலும் ஆடவில்லை.

இந்நிலையில், அவர் நியூசிலாந்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட்டுவிட்டார். எனவே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தனிமைப்படும் காலத்தை முடித்துவிட்டு, கொரோனா பரிசோதனை செய்துவிட்டு, அணியில் இணைவார்.

ஏற்கனவே ஸ்மித், பட்லர், ஆர்ச்சர், டாம் கரன் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்களும் ராஜஸ்தான் அணியில் ஆடிவரும் நிலையில், பென் ஸ்டோக்ஸ் அணியில் இணைந்தால், டாம் கரன் நீக்கப்பட்டு, ஆடும் லெவனில் ஸ்டோக்ஸ் சேர்க்கப்படுவார். பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணியின் காம்பினேஷன் பேலன்ஸுக்கு செம வலு சேர்ப்பார். அந்த அணியின் மிடில் ஆர்டர் சிக்கலை தீர்த்து ஃபினிஷிங் வேலையை அவர் பார்த்துக்கொள்வார்.

ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் இங்கிலாந்தின் மேட்ச் வின்னராக திகழும் பென் ஸ்டோக்ஸ், கண்டிப்பாக அதே பணியை ராஜஸ்தான் அணிக்கும் செய்வார் என்பதில் சந்தேகமில்லை. அவரை ரூ.12.5 கோடிக்கு ராஜஸ்தான் அணி 2018 ஏலத்தில் எடுத்திருந்தது.

loader