ஐபிஎல் 2021: சிஎஸ்கே கழட்டிவிடும் வீரர்கள் இவங்கதான்
ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை கழட்டிவிட வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் சிஎஸ்கே அணிக்கு படுமோசமான சீசனாக அமைந்தது. முதல் முறையாக இந்த சீசனில் தான் பிளே ஆஃபிற்குக்கூட முன்னேறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது சிஎஸ்கே அணி. வயது மூத்த வீரர்களை அதிகமாக கொண்டிருந்த சிஎஸ்கே அணி, அடுத்த சீசனில் அவர்களை எல்லாம் கழட்டிவிட்டு, புதிய அணியை கட்டமைக்கும் முனைப்பில் உள்ளது.
அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால், இளம் வீரர்களை அதிகமாக அணியில் எடுத்து, அடுத்த பத்தாண்டுக்கான அணியாக கட்டமைக்கும் முயற்சியில் சிஎஸ்கே அணி நிர்வாகம் உள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே அணி கழட்டிவிடும் வீரர்கள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, ஷேன் வாட்சன் ஏற்கனவே விடைபெற்றுவிட்டார். இம்ரான் தாஹிரை கண்டிப்பாக கழட்டிவிட்டுவிடுவார்கள். கேதர் ஜாதவுக்கும் சிஎஸ்கே அணி குட்பை சொல்லிவிடும். முரளி விஜயை கழட்டிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் ஆடிய பல வீரர்களை இனிமேல் பார்க்க முடியாது. பியூஷ் சாவ்லா, மோனு சிங் ஆகியொரும் கழட்டிவிடப்படுவார்கள். சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் முற்றிலுமாக மறுகட்டமைப்பு செய்யப்படும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.