எதுக்குமே லாயக்கில்லாத இவன் எதுக்கு டீம்ல? முன்னாள் வீரரின் கடுமையான விமர்சனத்துக்கு KXIP ஆல்ரவுண்டரின் பதிலடி

First Published 3, Oct 2020, 5:15 PM

பேட்டிங், பவுலிங் என எந்தவகையிலும் லாயக்கில்லாத வீரர் என்று தன்னை விமர்சித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆல்ரவுண்டர் பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிலடிக்கு சம்மந்தப்பட்ட முன்னாள் வீரரும் பதிலடி கொடுத்து மூக்கை உடைத்துள்ளார்.

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில், புதிய கேப்டன்(ராகுல்), புதிய பயிற்சியாளர்(அனில் கும்ப்ளே) என புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் நல்ல ஃபார்மில் சிறப்பாக ஆடி ஏராளமான ரன்களை குவித்தும்கூட, அந்த அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இது அந்த அணிக்கு பெரும் ஏமாற்றம் தான்.

பஞ்சாப் அணியில் ஆடும் 4 வெளிநாட்டு வீரர்களில் நிகோலஸ் பூரான் மற்றும் ஷெல்டான் கோட்ரெல் ஆகிய இருவரும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்கின்றனர். ஆனால் மேக்ஸ்வெல்லும் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷமும் படுமோசமாக சொதப்புகின்றனர்.

ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பேட்டிங்,  பவுலிங் என எந்தவகையிலும் தனது பங்களிப்பை அளிக்கவில்லை. முதல் போட்டியில் ஆடாத நீஷம், ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காததால், 2 ஓவர்கள் மட்டும் பந்துவீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த போட்டியில் 4 ஓவர்கள் முழுமையாக வீசி 40 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அது மெகா ஸ்கோர்(223) ஆட்டம் என்பதால் 40 ரன்களை விட்டுக்கொடுத்தது என்பது நல்ல பவுலிங் தான். ஆனால் மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான போட்டியில் பேட்டிங் ஆடி 7 பந்தில் வெறும் 7 ரன் மட்டுமே அடித்ததுடன், 4 ஓவர்கள் வீசி 52 ரன்களை வாரிவழங்கியதுடன், விக்கெட்டும் வீழ்த்தவில்லை.

ஜிம்மி நீஷம் பஞ்சாப் அணிக்கு பேட்டிங், பவுலிங் என எந்தவிதத்திலும் பங்களிப்பு செய்யாததால், அவரை கடுமையாக விளாசினார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. பஞ்சாப் அணி நீஷமை ஆடவைக்கிறது. வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலரான அவர், பவர்ப்ளேயிலும் வீசுவதில்லை, டெத் ஓவரிலும் வீசுவதில்லை. பேட்டிங்கில் 4 அல்லது 5ம் வரிசையிலும் இறங்குவதில்லை; நல்ல ஃபினிஷரும் இல்லை; பெரிய பவர் ஹிட்டரும் இல்லை. பிறகு ஏன் தான், மேட்ச் வின்னராக இல்லாத ஒரு வீரரை பஞ்சாப் அணி ஆடவைக்கிறது? என்று ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஆகாஷ் சோப்ராவின் தன் மீதான விமர்சனத்துக்கு, நீஷம் பதிலடி கொடுத்தார். 18.5 என்ற சராசரியுடன், 90 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் ஆடும் வீரரும் மேட்ச் வின்னர் அல்ல என்று ஆகாஷ் சோப்ராவின் பேட்டிங் சராசரி மற்றும் ஸ்டிரைக் ரேட்டை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்தார் நீஷம்.

ஜிம்மி நீஷமின் பதிலடிக்கு பதிலடி கொடுத்த ஆகாஷ் சோப்ரா, மிகச்சரி என் நண்பரே.. அதனால் தான் என்னை எந்த அணியும் எடுக்கவில்லை; வேறுவிதமாக நான் சம்பாதித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் பிரச்னை, எனது பேட்டிங் புள்ளிவிவரமாகத்தான் இருக்கிறதே தவிர, எனது பார்வையிலிருந்து நீங்கள் முரண்படவில்லை. எஞ்சிய போட்டிகளில் நீங்கள் சிறப்பாக ஆட வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார் ஆகாஷ் சோப்ரா.

loader