MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • இந்தியா
  • Vande Bharat : இது ரயிலா இல்ல பைவ் ஸ்டார் ஹோட்டலா? வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இம்புட்டு வசதிகளா?

Vande Bharat : இது ரயிலா இல்ல பைவ் ஸ்டார் ஹோட்டலா? வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இம்புட்டு வசதிகளா?

Vande Bharat Sleeper Train : இந்திய ரயில்வேயின் புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், நீண்ட தூர இரவுப் பயணங்களுக்காக நவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் ஏசி கோச் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 25 2026, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vande Bharat Sleeper train
Image Credit : X

Vande Bharat Sleeper train

இந்திய ரயில்வேயின் லேட்டஸ்ட் பெருமை, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், மறுபடியும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. மும்பை - பெங்களூரு தடத்தில் இந்த ரயில் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் ஃபர்ஸ்ட் ஏசி கோச்சின் படங்களும் வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இதன் அசத்தலான இன்டீரியர் டிசைன், மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் பிரீமியம் லுக் பயண விரும்பிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பயணம் இன்னும் சொகுசாகும்
Image Credit : X

பயணம் இன்னும் சொகுசாகும்

தற்போது சேவையில் உள்ள வந்தே பாரத் ரயில்கள், பெரும்பாலும் பகல் நேர குறுகிய தூர பயணத்துக்கான சேர் கார் வசதியுடன் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த புதிய ஸ்லீப்பர் ரயில், நீண்ட தூர இரவுப் பயணங்களை இன்னும் சொகுசாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு அதிக பிரைவசி மற்றும் வசதியை உறுதி செய்யும் வகையில் கோச்சுகள் டிசைன் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் வெளியான படங்களைப் பார்க்கும்போது, ரயில் பெட்டியின் உள்பக்கம் மிகவும் நேர்த்தியான லே-அவுட், சிறந்த இடவசதி, அசத்தலான ஃபினிஷிங் மற்றும் நவீன லைட்டிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருப்பது தெரிகிறது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு பல புதுமைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

Related Articles

Related image1
வந்தே பாரத் உட்பட 155 ரயில்கள் குறித்து ரயில்வே வாரியத்தின் பெரிய அறிவிப்பு
Related image2
Vande Bharat Sleeper: பெங்களூரு - மும்பை இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! 1,139 கி.மீ.. 16 மணி நேரம்.. குஷியில் பயணிகள்
34
வசதிகள் என்னென்ன?
Image Credit : X

வசதிகள் என்னென்ன?

சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், டிஜிட்டல் தகவல் திரைகள், நவீனமயமாக்கப்பட்ட கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட பெர்த் டிசைன், அதிக பிரைவசி தரும் மூடிய கேபின்கள் மற்றும் ஸ்லைடிங் கதவுகள் போன்றவை இந்த ரயிலின் சிறப்பம்சங்கள். மேலும், மேல் பெர்த்துக்கு ஏறுவதற்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வசதியான படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பயணத்தின்போது ஏற்படும் குலுக்கலைக் குறைத்து, இதமான பயணத்தை உறுதி செய்வதற்காக, இதில் நவீன சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைவான நிறுத்தங்களுடன் இயக்கப்படுவதால், தற்போதுள்ள பல இரவு நேர ரயில்களை விட பயண நேரம் கணிசமாகக் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

44
எப்போ லாஞ்ச் ஆகிறது?
Image Credit : Getty

எப்போ லாஞ்ச் ஆகிறது?

இந்த ரயிலின் அதிகாரப்பூர்வ சேவை தொடங்கும் தேதி, நேர அட்டவணை, டிக்கெட் கட்டணம் போன்ற விவரங்களை இந்திய ரயில்வே இன்னும் அறிவிக்கவில்லை. ஆனாலும், விரைவில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் பயணத்தில் உள்ள நீண்ட நடைமுறைகள் மற்றும் லக்கேஜ் கட்டுப்பாடுகளைத் தவிர்த்து, சொகுசாக நீண்ட தூரம் பயணிக்க விரும்புவோருக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ஒரு சிறந்த மாற்றாக அமையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
வைரலாகும் அம்பானி மருமகளின் நடனம்! ஏன் தெரியுமா?
Recommended image2
Heritage Trains: 170 வருஷம் ஆனாலும் மாறாத கெத்து; இந்தியாவின் 5 பழமையான பாரம்பரிய ரயில்கள் இவைதான்
Recommended image3
Gucchi Mushroom: பிரிக்ஸ் தலைவர்களை அசத்திய குச்சி காளான்.! இதன் விலையைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!
Related Stories
Recommended image1
வந்தே பாரத் உட்பட 155 ரயில்கள் குறித்து ரயில்வே வாரியத்தின் பெரிய அறிவிப்பு
Recommended image2
Vande Bharat Sleeper: பெங்களூரு - மும்பை இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! 1,139 கி.மீ.. 16 மணி நேரம்.. குஷியில் பயணிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved