மன்மோகன் சிங் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி; தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை நிறைவேற்றியவர் என புகழாரம்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை நிறைவேற்றியவர் மன்மோகன் சிங் என அவர் பெருமிதம் தெரிவித்தார்.
Stalin paid tribute Manmohan Singh
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்ற மன்மோகன் சிங்கின் மறைவால் நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. டெல்லியில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Manmohan Singh passes away
இதேபோல் மத்திய அமைச்சர்கள் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்ட மன்மோகன் சிங்கின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்பு அவரது குடும்பத்துக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
அட! மன்மோகன் சிங் 4ம் வகுப்பு வரை இவ்வளவு மார்க் தான் எடுத்தாரா? ரேங்க் கார்டு இதோ!
Former PM Manmohan Singh
மேலும் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, ஆ.ராசா மற்றும் திருச்சி சிவா ஆகியோரும் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''மன்மோகன் சிங் மன்மோகன் சிங் மறைவு காங்கிரசுக்கு மட்டும் அல்ல; ஒட்டுமொத்த நாட்டிற்கே பேரிழப்பாகும்.
மன்மோகன் சிங் இரண்டு முறை பிரதமராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தை எந்த அளவுக்கு உயர்த்தியவர் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டின் உள்கட்டப்புமைகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவர் உறுதுணையாக இருந்துள்ளார். மதுரவாயல் திட்டம், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலைகள் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர்.
MK stalin
தமிழர்களின் பல ஆண்டு கனவான தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை நிறைவேற்றித் தந்தவர் அவர் தான். புரட்சிகரமிக்க திட்டமான 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த காரணமாக இருந்தவரும் அவர் தான். மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர காரணமாக இருந்தவர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வந்ததும் மன்மோகன் சிங் தான்.
தலைவர் கலைஞருடன் மிகவும் நெருக்கமாக பழகியவர் மன்மோகன் சிங். அவர் மறைந்து விட்டார் என்பது வேதனையளிக்கும் விஷயமாகும். ஆகவே காங்கிரசுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று கூறியுள்ளார்.
மன்மோகன் சிங் எப்போதும் நீல நிற தலைப்பாகை அணிந்தது ஏன்?; இதுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?