அட! மன்மோகன் சிங் 4ம் வகுப்பு வரை இவ்வளவு மார்க் தான் எடுத்தாரா? ரேங்க் கார்டு இதோ!
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பள்ளிப்பருவம் குறித்தும், அவர் எடுத்த மதிப்பெண்கள் குறித்தும் இந்த செய்தியில் பார்க்கலாம்.
மன்மோகன் சிங்கின் குழந்தை பருவம்
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். வெறும் அரசியல்வாதியாக மட்டுமின்றி புகழ்பெற்ற பொருளாதார நிபுணராக திகழந்த அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன் சிங் குழந்தை பருவத்தில் எங்கு படித்தார்? எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றார்? என உங்களுக்கு தெரியுமா?
பிறந்தது எங்கே?
இதுவரை யாரும் சொல்லாத மன்மோகன்சிங்கின் பள்ளிப்பருவம் குறித்து இந்த செய்தியில் விரிவாக காணலாம். மன்மோகன் சிங் 1932ம் ஆண்டு பிரிக்கப்படாத இந்தியாவின் 'பஞ்சாப் காஹ்' கிராமத்தில் பிறந்தார். இப்போது இந்த பகுதி பாகிஸ்தானின் சக்வால் மாவட்டத்தில் உள்ளது. முதலில் ஒருங்கிணைந்த இந்தியாவில் இருந்த இந்த பகுதி, இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தான் வசம் சென்று விட்டது.
1 முதல் 4ம் வகுப்பு வரை படித்தார்
மன்மோகன் சிங் தனது குழந்தைப் பருவத்தில், காஹ் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். இந்தப் பள்ளியில் 1937ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி 1ம் வகுப்பில் சேர்ந்தார். 1ம் வகுப்பில் அவருடைய பெயர் எண் 187 ஆகும். 1 முதல் 4ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் படித்த மன்மோகன் சிங், 2ம் வகுப்பில் 22 வது இடத்தைப் பிடித்தார். அவர் 60க்கு 39 மதிப்பெண்கள் எடுத்தார்.
எத்தனையாவது ரேங்க்?
3ம் வகுப்பை பொறுத்தவரை மன்மோகன் சிங் வகுப்பில் 18வது மாணவனாக இருந்தார். அவர் 60-க்கு 55 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 4ம் வகுப்பில் அவர் 15வது ரேங்க் பெற்றிருந்தார். மன்மோகன் சிங் படித்த ஆவண குறிப்பில், ரேங்க் கார்டுகள் இந்த பள்ளியில் இன்றும் உள்ளன. இந்த அரசு பள்ளியில் உள்ள ஆவணங்களின்படி, இங்கு 4ம் வகுப்பு வரை படித்த மன்மோகன் சிங் 1941ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு உயர்படிப்புக்காக வேறு இடத்துக்கு சென்றுள்ளார்.