Summer heat wave : கொளுத்தும் கோடை வெயில்! - 5 மாநிலங்களுக்கு வானிலை மையம் அபாய எச்சரிக்கை!
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்வி நிறுவனங்களும் ஏப்ரல் 17-ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
summer
அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த நாட்களாகவும், ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் 3 நாட்களாகவும் பீகார் மாநிலத்தில் 2 நாட்களாகவும் கடுமையான வெப்ப அலை வீசி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளம்
மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்வி நிறுவனங்களும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தற்போது நிலவும் வெப்பச்சலனம் காரணமாக டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் மாவட்டங்களைத் தவிர மாநிலத்தில் உள்ள அனைத்து தன்னாட்சி, மாநில, மத்திய அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள் ஏப்ரல் 17 முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆராய்ச்சி மைய்யம், (IMD) மேற்கு வங்க மாநிலத்திற்கு வெப்ப அலை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
heat waves
ஒடிசா
ஒடிசாவிலும் கடுமையான கோடை வெப்பம் தாக்கி வருகிறது. பகல் பொழுது வெப்பநிலை கடந்த வியாழன் அன்று 43.5 டிகிரி செல்சியஸை எட்டியது, இது இந்த மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையைக் குறிக்கிறது.
"பாரிபாடாவில் 43.5 டிகிரி செல்சியஸ் பதிவானது, இது இந்த மாதத்தில் ஒடிசாவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்" என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) மூத்த விஞ்ஞானி உமாசங்கர் தாஸ் தெரிவித்தார்.
ஏப்ரல் 10ம் தேதி, மாநில தலைநகர் புவனேஷ்வரில் அதிகபட்ச வெப்பநிலையாக 37.5 டிகிரி செல்சியஸைத் தொட்டது. கோடை மழைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளதால், அடுத்த ஓரிரு நாட்களில் நகரில் அதிகபட்ச வெப்பநிலை உயரும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
heat wave
டெல்லி
தேசிய தலைநகர் டெல்லியில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெப்பநிலை இயல்பை விட 4.5 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்" என்று வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார்.
டெல்லியின் முக்கிய வானிலை ஆய்வு நிலையமான சஃப்தர்ஜங் ஆய்வகத்தில் அதிகபட்சமாக 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது, இது சாதாரண சராசரியை விட மூன்று டிகிரி அதிகமாகும்.
இதையும் படிங்க..ஜிஎஸ்டி விதியில் அதிரடி மாற்றம்.. மே 1 முதல் ஜிஎஸ்டி விதிகள் மாறுகிறது - முழு விபரம்
பீகார்
பீகார் மாநிலத்தில் கொளுத்தும் கோடை வெயிலால், மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3-4 நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் அதிகபட்சம் அல்லது பகல்நேர வெப்பநிலை ஒன்று முதல் நான்கு புள்ளிகள் வரை அதிகரிக்கும் என்று பாட்னா வானிலை மையம் கணித்துள்ளது. வடக்கு பீகாரில் 40-42 டிகிரி செல்சியஸ் வரையிலும், மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் 42-44 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் நடைபெற்ற மகாராஷ்டிர பூஷண் விருது வழங்கும் விழாவில் 11 பேர் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
IMD இன் தரவுகளின்படி, ஏப்ரல் நடுப்பகுதியில், மகாராஷ்டிராவில் 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிகபட்ச பகல்நேர வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது, சந்திராபூர் அதிகபட்ச வெப்பநிலையாக 43.2 டிகிரி செல்சியஸைப் பதிவுசெய்துள்ளது.
பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துள்ளன, மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதார அதிகாரிகள் மதியம் 1-5 மணி வரை தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.