வெயிலின் தாக்கம்: அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் 11 பேர் சுருண்டு விழுந்து பலியான துயர சம்பவம்
மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நவி மும்பையில் திறந்த வெளியில் பூஷன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமித் ஷா தலைமையிலான இந்த நிகழ்ச்சியில் வெப்ப தாக்கத்தால் 11 பேர் உயிரிழந்தனர்.
திறந்த வெளியில் அமர்ந்திருந்த 11 பேர் வெப்ப தாக்கத்தால் உயிரிழந்ததாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார். அங்கு சுமார் 50 பேர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவு ஆனதாக கூறப்படுகிறது. செய்யப்பட்டது. இதில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். நவி மும்பையில் உள்ள பிரமாண்ட மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
காலை 11.30 மணிக்கு தொடங்கிய பரிசளிப்பு விழா மதியம் 1 மணி வரை நடந்தது. மைதானம் மக்களால் நிரம்பியிருந்ததுடன், நிகழ்வைக் காணும் வகையில் ஆடியோ மற்றும் வீடியோ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பார்வையாளர்களுக்கான இருக்கை ஏற்பாடு செய்யபட்டிருந்தது. ஆனால் அதற்கு மேல் கொட்டகை இல்லை.
இதையும் படிங்க..ஜிஎஸ்டி விதியில் அதிரடி மாற்றம்.. மே 1 முதல் ஜிஎஸ்டி விதிகள் மாறுகிறது - முழு விபரம்
இதுகுறித்து பேசிய துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியதுடன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்தார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இதுபற்றி பேசும் போது, “24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார். அடுத்த ஐந்து நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் உயரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க..இனிமே இலவசம் கிடையாது.. ஐபிஎல் சீசனை காசு கொடுத்தா தான் பார்க்க முடியும் - முழு விபரம்